லகலகலக... ‘சந்திரமுகி’ 2ம் பாகத்திற்கு கதை ரெடி.. தயாரிப்பாளரும் ரெடி.. ஆனால்..!
இந்தியில் சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது.
மும்பை: தமிழில் ரஜினி நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் இந்தியில் தயாராகவுள்ளது.
தமிழில் ரஜினி, நயன் தாரா, ஜோதிகா, பிரபு என நட்சத்திரப் பட்டாளமே நடித்த படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கி இருந்த இப்படம் 890 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றிப்படம் ஆகும்.
இப்படத்தை இந்தியில் 'பூல் பூலையா' என்ற பெயரில் 2007ம் ஆண்டு ரீமேக் செய்தனர். அக்ஷய் குமார், வித்யாபாலன் நடித்திருந்த அப்படம் தமிழைப் போலவே இந்தியிலும் நல்ல வசூலையும், வரவேற்பையும் பெற்றது.

இரண்டாம் பாகம்:
இந்நிலையில், வெற்றிப்படமான இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் பாலிவுட் இறங்கியுள்ளது. இதற்காக பர்ஹத் சாம்ஜி என்பவர் தயார் செய்துள்ள கதைக்கு, தயாரிப்பாளர் பூஷன் குமார் ஓகே சொல்லி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலைப்பு பதிவு:
விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாக பட வேலைகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கிறது. முதல் பாக வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்திற்கான தலைப்பை ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுமுக நடிகர்கள்:
முதல் பாகத்தில் நடித்த அக்ஷய்குமார், வித்யாபாலனே இதிலும் நடிப்பார்களா அல்லது வேறு நடிகர்கள் நடிப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பெரும்பாலும் இப்படத்தில் புதுமுக நடிகர்களையே நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சந்திரமுகி 2:
இந்தத் தகவலால் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் சந்திரமுகி இரண்டாம் பாக ஆசை உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த ரஜினி, நயன் மற்றும் ஜோதிகாவே இரண்டாம் பாகத்திலும் நடிக்க வேண்டும் என்பதே அவர்களது ஆசை. யாராவது இதற்கான கதையை தயார் செய்வார்களா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











