இன்னொரு விவசாய படம்.. பூமி ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

ஜெயம் ரவியின் 25வது படமாக உருவாகி பூமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார்.

சென்னை: ரோமியோ ஜூலியட், போகன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜெயம் ரவியை இயக்கி வருகிறார் இயக்குநர் லக்‌ஷ்மன்.

கோமாளி படத்தின் மாபெரும் வெற்றியை ருசி பார்த்த ஜெயம் ரவி, தனது 25வது படமான பூமி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளார்.

இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார்.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. விக்ரம், கார்த்தியை போல ஜெயம் ரவியும் அந்த படத்திற்காக முடியை வளர்த்து வருகிறார். ஆனால், இதுவரை அந்த படம் குறித்த அறிவிப்பை ஜெயம் ரவி வெளியிடவில்லை.

வெற்றி

வெற்றி

ஜெயம் ரவி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கோமாளி திரைப்படம் மிகப்பெரிய வசூலையும் பாராட்டுக்களையும் ஜெயம் ரவிக்கு பெற்றுத் தந்தது. அந்த படத்தை இந்தியில் அர்ஜுன் கபூர் நடிப்பில் ரீமேக் செய்ய உள்ளனர். கோமாளி படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜெயம் ரவி பூமி படத்தின் ஷூட்டிங்கில் மும்முரம் காட்டி வருகிறார்.

விவசாய படம்

விவசாய படம்

சமீப காலமாக தமிழ் சினிமாவில் விவசாயத்தையும், விவசாயிகளின் பிரச்சனைகளையும் குறித்த படங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், சூர்யாவின் காப்பான் உள்ளிட்ட படங்களிலும் விவசாயம் மையக்கருத்தாக இருந்தது. இந்நிலையில், தற்போது பூமி என்ற தலைப்புடன், விவசாயிகளுடன் விவசாயியாக ஜெயம் ரவி இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

கெமிஸ்ட்ரி

கெமிஸ்ட்ரி

பொதுவாக ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் தான் கெமிஸ்ட்ரி இருக்கும் என சொல்வார்கள். ஆனால், சில ஹீரோக்களுக்கும் இயக்குநர்களுக்கும் கூட பயங்கர கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகும். அதுபோல, ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்‌ஷ்மன் இயக்கத்தில் மீண்டும் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

மிஸ்ஸிங்

ஜெயம் ரவி, லக்‌ஷ்மன் கூட்டணியில் உருவான ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் படங்களில் நாயகியாக நடித்த ஹன்சிகா இந்த படத்தில் இல்லை. அவருக்கு பதிலாக முன்னா மைக்கேல், ஐ ஸ்மார்ட் சங்கர் உள்ளிட்ட படங்களில் நடித்த பாலிவுட் நடிகை நிதி அகர்வாலை பூமி படத்திற்காக கோலிவுட்டுக்கு இறக்குமதி செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X