விவசாயத்தை போற்றுவோம்.. பூமி டீசர் சொல்லும் மெசேஜ்!

சென்னை: வெளியானது ஜெயம் ரவியின் பூமி படத்தின் டீசர். விவசாயம், இந்தியா என நாட்டுப்பற்று திரைப்படமா என ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் டீசர் ஆமாம்.. விவசாயம்தான் என்று அடித்துக் கூறியுள்ளது.

கோமாளி படம் கடந்த வருடத்தில் யாரும் ஏதிர்ப்பாக்காத வெற்றியை பெற்றது. கோமாவில் இருந்து 20 வருடங்கள் கழித்து மீண்டு வரும் ஒரு இளைஞனின் கதை.

அதில் பாசம், காதல், மனிதம் என ஒரு கமர்சியல் படமாக இருந்தது. யோகி பாபு மற்றும் ஜெயம் ரவியின் காமெடி பெரிதும் பேசப்பட்டது, இப்படம் 100 நாட்கள் கடந்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 ரோமியோ ஜூலியட்

ரோமியோ ஜூலியட்

இதனை அடுத்து அப்படம் முடித்த கையோடு ஜெயம் ரவி ரோமியோ ஜீலியட் மற்றும் போகன் படங்களை இயக்கிய லக்ஷ்மணன் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போகிறார் என்று அறிவிக்கப்பட்டது. படத்திற்கு "பூமி" என்று தலைப்பு வைத்தனர். இப்படம் ஜெயம் ரவியின் 25வது படம் என்பது ஒரு தனி சிறப்பு, வரிசையாக பர்ஸ்ட் லுக் சிறிது நாள் கழித்து இரண்டாவது லுக் வெளியானது.

 பூமி டீசர்

பூமி டீசர்

நேற்று மாலை இப்படத்தின் டீசர் வெளியானது, விவசாயம், இந்தியா, சைன்ஸ் என ஒரு கம்பிளிட் பேக்கேஜ் ஆக இருந்தது இப்படத்தின் டீசர். மேலும் டீசர் வெளியானதிலிருந்து தற்போது வரை 1.7 மில்லியன் பேர் பார்த்து உள்ளனர் அது மட்டுமின்றி தற்போது வரை யூட்யூப் முதல் டீசராக டிரண்டிங்கில் உள்ளது. ஒரு விவசாயி மற்றும் அவர்களை சார்ந்து உள்ளவர்கள்படும் கஷ்டங்கள், அரசாங்கம் அவர்களுக்கு என்ன செய்கிறது போன்றவற்றை பேசி இருக்கிறது பூமி டீசர்.

சரண்யா

சரண்யா

இப்படத்தில் ஜெயம் ரவி, நித்தி அகர்வால், சரண்யா பொன்வண்ணன், ராதா ரவி மற்றும் தம்பி ராமையா போன்ற பலர் நடித்துள்ளனர். டி. இமான் இசை அமைத்துள்ளார், மேலும் டீசர் பார்க்கும் பொழுது காட்சிகள் அனைத்தும் கவரும் வகையில் இருந்தது பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களை அழகாக படம் பிடித்துள்ளார் டட்லி.

 கத்தி போல இருக்குமா

கத்தி போல இருக்குமா

டீசரை பார்த்த பலரும் கூறுவது இது விஜய் நடித்த கத்தி படம் போன்று இருக்குமோ என்று ஒரு செய்தியை கிளப்பி விட்டுள்ளனர். விவசாயம், அரசியல் போன்றவற்றை அப்படமும் பேசியது அதனால் இது போன்ற ஒரு செய்தி வருவது வழக்கமாக நடப்பது தான், படம் வந்ததும் தான் தெரியும் உண்மையாக படத்தில் என்ன கதை உள்ளது என்று, இப்படம் உழைப்பாளர் தினத்தன்று வரும் மே ஒன்றாம் தேதி வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X