‘Bhuj: The Pride of India’ சுந்தரவன காட்டுப் பெண் சோனாக்ஷியின் அசத்தல் லுக் ரிலீஸ் #sonakshisinha
மும்பை: அஜய் தேவ்கன், சஞ்சய் தத் மற்றும் சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் உருவாகி உள்ள 'Bhuj: The Pride of India' படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
அந்த படத்தில் சுந்தரவன காடுகளில் வசிக்கும் வீரப் பெண்ணான ஜேத்தா மாதர்பர்யா ரோலில் நடித்துள்ள சோனாக்ஷி சின்ஹாவின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
சோனாக்ஷியின் இந்த மிரட்டலான லுக்கை பார்த்த அவரது ரசிகர்கள் #sonakshisinha என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

புஜ்: தி பிரைட் ஆஃப் இந்தியா
சுதந்திர போராட்டத்தை மையப்படுத்தி ஏகப்பட்ட படங்கள் ரிலீசாகி உள்ளன. ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் உள்பட மேலும் பல படங்களும் உருவாகி வருகின்றன. இந்நிலையில், அடுத்த மாதம் வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு அஜய் தேவ்கன், சஞ்சய் தத், சோனாக்ஷி சின்ஹா நடித்த ‘Bhuj: The Pride of India' படம் ரிலீசாக உள்ளது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில்
வரும் ஜூலை 31ம் தேதி ஏகப்பட்ட பாலிவுட் படங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் டிஜிட்டல் கிளாஷ் நடத்த விருக்கின்றன. அதில் ஒரு படமாக அஜய் தேவ்கனின் புஜ்: தி பிரைட் ஆஃப் இந்தியா படமும் இடம்பெற்றிருக்கிறது. தியேட்டர்கள் மூடிக் கிடப்பதால், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இந்த படம் ரிலீசாகிறது.

என்ன கதை
1971ம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் போரின் போது, எதிரிகளால் சேதமான புஜ் விமான நிலையத்தை, சுந்தரவன காடுகளில் வசிக்கும் 300 வீரப் பெண்மணிகளை கொண்டு விமானப் படை அதிகாரி விஜய் கர்ணிக் மீண்டும் உருவாக்கிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்துத் தான் இந்த படத்தை இயக்குநர் அபிஷேக் துதையா உருவாக்கி இருக்கிறார்.

சோனாக்ஷி சின்ஹா லுக்
முன்னதாக அஜய் தேவ்கனின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், தற்போது சோனாக்ஷி சின்ஹாவின் மிரட்டலான லுக் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. சோனாக்ஷியின் இந்த அதிரடியான கிராமத்து பெண் லுக் ரிலீசான நிலையில், அவரது ரசிகர்கள் #sonakshisinha என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











