பாலிவுட்டில் ரீமேக் ஆகும் அனுஷ்கா படம்.. அந்த லஸ்ட் ஸ்டோரிஸ் நடிகை அதுக்கு செட் ஆவாங்களா?

சென்னை: அனுஷ்கா நடிப்பில், தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான பாகமதி திரைப்படம் பாலிவுட்டில் ரீமேக் ஆகிறது.

லஸ்ட் ஸ்டோரிஸ், சாந்த் கி ஆங்க் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகை புமி பெட்னேகர் தான் நாயகியாக நடிக்க உள்ளார்.

துர்காவதி எனும் டைட்டிலில், உருவாகி வரும் அந்த படத்திற்காக தான் ரொம்ப ஆவலுடன் காத்திருப்பதாக புமி பெட்னேகர் தெரிவித்துள்ளார்.

லஸ்ட் ஸ்டோரிஸ்

லஸ்ட் ஸ்டோரிஸ்

ராதிகா ஆப்தே, கியரா அத்வானி, புமி பெட்னேகர், மனிஷா கொய்ராலா உள்ளிட்ட நடிகைகள் நடிப்பில் நெட்பிளிக்ஸ் தொடராக வெளியான லஸ்ட் ஸ்டோரிஸ் உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அதில், ஜோயா அக்தர் இயக்கத்தில் உருவான கதையில் வேலைக்கார பெண்ணாகவும் பாலியல் காட்சிகளிலும் புமி பெட்னேகர் போல்டாக நடித்திருப்பார்.

கேஸ்டிங் டைரக்டர்

யஷ் ராஜ் சோப்ரா தயாரிப்பு நிறுவனத்தில், சுமார் 6 ஆண்டுகளாக துணை கேஸ்டிங் இயக்குநராக பணிபுரிந்து வந்த புமி பெட்னேகர், 2015ம் ஆண்டு தும் லகா கே அய்ஷா எனும் படத்தில் அறிமுகமானார். டாய்லட் ஏக் பிரேம் கதா, சுப் மங்கள் ஷாவ்தன், பாலா, பதி பத்னி அவுர் வோ, சாந்த் கி ஆங்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நடிகையாகி உள்ளார்.

டாப்ஸி உடன்

டாப்ஸி உடன்

கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான சாந்த் கி ஆங்க் படத்தில், நடிகை டாப்ஸி உடன் இணைந்து, வயது முதிர்ந்த துப்பாக்கி சுடும் பாட்டியாக நடித்து இருவரும் அசத்தினர். சமீபத்தில், நடந்த பிலிம்பேர் விருது விழாவில் இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகை விருதை புமி பெட்னேகர் தட்டிச் சென்றார்.

நிர்வாணமாக

பாலிவுட்டின் பிரபல புகைப்படக் கலைஞர், தபு ரத்னானியின் லேட்டஸ்ட் கேலண்டர் போட்டோஷூட்டுக்காக சன்னி லியோன், கியரா அத்வானி மற்றும் புமி பெட்னேகர் நிர்வாணமாக போஸ் கொடுத்தது, பாலிவுட்டில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. புமி பெட்னேகர், பாத் டப்பில் இருந்த படி செம ஹாட்டாக போஸ் கொடுத்திருந்தார்.

பாகமதி ரீமேக்

பாகமதி ரீமேக்

சாந்த் கி ஆங்க் திரைப்படத்தில் பாட்டியாக நடித்த புமி பெட்னேகர், அடுத்ததாக, அனுஷ்காவின் பாகமதி திரைப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்து நடித்து வருகிறார். துர்காவதி எனும் தலைப்பில் உருவாகி வரும் இந்த படத்தை தான் மிகவும் எதிர்பார்ப்பதாகவும், முழு கதையையும் தாங்கும் ரோலில் நடிப்பது மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.

தக்த்

தக்த்

கரண் ஜோஹர் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில், உருவாகி வரும் மெகா பட்ஜெட் திரைப்படமான தக்த் படத்திலும் புமி பெட்னேகர் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். ஜான்வி கபூர், ரன்வீர் சிங், கரினா கபூர் மற்றும் ஆலியா பட் என பாலிவுட்டின் நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படத்தில் புமி பெட்னேகர் முக்கிய ரோலில் மிரட்டவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X