twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    15 நாட்கள்.. 18 மணி நேர உழைப்பு.. யார் சொன்னா நடிகைகள் கிளாமருக்கு மட்டுந்தான்னு!

    |

    மும்பை: 60 வயது முதிர்ந்த துப்பாக்கி சுடும் பாட்டி வேடத்தில் டாப்ஸி பன்னு மற்றும் புமி பெட்னேகர் நடித்துள்ளனர்.

    தீபாவளி பண்டிகைக்கு இவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள சாந்த் கி ஆன்க் திரைப்படம் வெளியாகிறது.

    இந்நிலையில், தொடர்ந்து 15 நாட்களும் சுமார் 18 மணி நேரத்திற்கும் மேலாக தான் ஓயாது உழைத்து வருவதாகவும், நடிகைகள் வெறும் கிளாமருக்கு மட்டுமே என கூறிவரும் பலருக்கு இது பதிலடியாக இருக்கும் என புமி பெட்னேகர் கூறியுள்ளார்.

    60 வயது கிழவி

    60 வயது கிழவி

    பாலிவுட்டில் நடிப்பு திறமையை வெளிக்காட்டி வரும் நடிகைகளில் முக்கியமானவராக புமி பெட்னேகர் திகழ்கிறார். 30 வயதாகும் இவர், 60 வயது கிழவி கதாபாத்திரத்தை துணிச்சலோடு ஏற்று நடித்துள்ளார்.
    வட இந்தியாவில் துப்பாக்கி சுடுதலில் கலக்கி வரும் நிஜ பாட்டிகளின் பயோபிக் கதையாக உருவாகியுள்ள சாந்த் கி ஆன்க் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெடிக்கப்போகிறது.

    சிறந்த கதை தேர்வு

    சிறந்த கதை தேர்வு

    இளம் நடிகையான புமி பெட்னேகர், டாய்லட் ஏக் பிரேம் கதா, சுப் மங்கள் சாவ்தன், சாந்த் கி ஆன்க், பாலா, பதி பத்னி அவுர் போன்ற சிறந்த கதையம்சம் கொண்ட கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

    கிளாமருக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் புமி பெட்னேகருக்கு என்றே பாலிவுட்டில் ஒரு ரசிகர் கூட்டமே உருவாகி உள்ளது.

    15 நாட்கள்.. 18 மணி நேரம்..

    15 நாட்கள்.. 18 மணி நேரம்..


    பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே சும்மா கிளாமராக வந்து செல்லும் அழகு பதுமைகள் மட்டுந்தான் என்ற எண்ணத்தை இனியாவது மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லும் அளவிற்கு, தொடர்ந்து 15 நாட்களாக கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் 18 மணி நேரம் புமி உழைத்து வருகிறாராம்.

    தீபாவளிக்கு வெளியாகவுள்ள சாந்த் கி ஆன்க் திரப்படத்தின் புரமோஷன், பாலா படத்தின் புரமோஷன் மற்றும் சமீபத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள பதி பத்னி அவுர் என மூன்று படங்களுக்காகவும், கடந்த 15 நாட்களாக தினமும் 18 மணி நேரம் ஓய்வின்றி உழைத்து வருகிறார்.

    டாப்ஸியுடன் நட்பு

    டாப்ஸியுடன் நட்பு

    அனுராக் கஷ்யாப் தயாரிப்பில் துஷார் ஹிராநந்தனி இயக்கத்தில் உருவாகி உள்ள சாந்த் கி ஆன்க் திரைப்படம் வரும் அக்டோபர் 25ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

    இந்த படத்தில், 60 வயது பாட்டியாக புமியும், டாப்ஸியும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நேரத்தில் மட்டுமல்லாமல், டாப்ஸியுடன் தனக்கு நல்ல நட்பு உருவாகியுள்ளதாகவும், அவரும் பிங்க், பாட்லா உள்ளிட்ட நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருவதாகவும் புமி கூறியுள்ளார்.

    English summary
    Actress Bhumi Pednekar has gone all out for her work commitments, and has been working 18 hour shifts the last 15 days! Who said the live of actors is all glamorous and no hard work?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X