போதும் நிறுத்துங்க.. மேலும் சேற்றை வாரி அடிக்காதீங்க.. சுஷாந்த் சிங் மரணம்.. பூமிகா கோபம்
சென்னை: சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் விவாதங்களை யாரும் நடத்த வேண்டாம் என நடிகை பூமிகா சாவ்லா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
நடிகர் விஜய்யின் பத்ரி, சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் மற்றும் சமந்தாவின் யு டர்ன் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்தவர் பூமிகா.
எம்.எஸ். தோனி பயோபிக் படத்தில் சுஷாந்த் சிங்கின் அக்காவாக இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒரு வாரத்திற்கும் மேலாக
கடந்த ஜூன் 14ம் தேதி தனது வீட்டில் மன அழுத்தம் தாங்க முடியாமல் இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது நாடு முழுக்க அதிர்வலைகளை எழுப்பியது. சுஷாந்த் இறந்து ஒரு வார காலம் ஆன பின்னரும், அவருடைய மரணத்திற்கு இது காரணம், அது காரணம், அவர்கள் தான் கொன்று விட்டார்கள் போன்ற விவாதங்கள் எழுந்து வருகின்றன.

அக்காவாக
நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பாலிவுட்டில் பரவி வரும் நெபோடிஸம் தான் காரணம் என்றும், காதல் பிரச்சனையாகவும் இருக்கலாம் என்றும், இல்லை வேறு சில காரணங்கள் இருக்கலாம் என பல வதந்திகள் உலா வருகின்றன. இந்நிலையில், எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தில் சுஷாந்த் சிங்கின் அக்காவாக நடித்த முன்னாள் ஹீரோயின் பூமிகா ஒரு உருக்கமான போஸ்ட்டை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரகசியங்கள் உன்னுடனே
அன்பான சுஷாந்த், நீ இறந்து ஒரு வார காலம் ஆகிவிட்டது. நீ ஏன் இறந்தாய் என்ற உண்மையான ரகசியங்கள் உன்னுடனே சேர்ந்து மறைந்து விட்டது. சுஷாந்த் சிங்கின் மரணத்தால் வாடும் அத்தனை பேருக்கும் ஒன்று கூறி கொள்கிறேன். அந்த நல்ல மனம் கொண்டவரின் இறப்பை இனியும் கொச்சைப் படுத்தாதீர்கள்.

போதும் நிறுத்துங்க
சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு இவர் காரணம், அவர் காரணம் என விரல் நீட்டி சுட்டிக் காட்டும் விவாதங்களை இனியும் தொடர வேண்டாம். அது அவரது மரணத்தால் வாடும் குடும்பத்தின் மீது மேலும், சேற்றை வாரி இரைக்கும் செயலாகும். எப்படி இறந்தார் என்ன காரணம் என்ற விசாரணைகள் நடக்கிறது. உண்மை வெளியாகும், உங்கள் வீண் விவாதங்களை நிறுத்திக் கொள்ளுங்கள் என நடிகை பூமிகா தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
Recommended Video

உங்களை சுற்றி உள்ளவர்களை
நடிகர் ஒருவர் இறந்துவிட்டால், திடீரென அவரை சுற்றி மொய்க்கும் இத்தனை பெரிய கூட்டம் அவர் உயிரோடு இருக்கும் போது ஆதரவாக வருவதில்லை. முதலில் உங்களை கவனியுங்கள், உங்களை சுற்றி உள்ளவர்கள் நலமாக இருக்கிறார்களா என்று பாருங்கள், வசதி இருக்கிறதா? வசதியற்ற குழந்தைகளுக்கு கல்வி கொடுங்க, வீண் விவாதங்களில் நேரத்தை விரையமாக்க வேண்டாம் என நெட்டிசன்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் பூமிகா.


Click it and Unblock the Notifications











