கணவரை பிரிந்துவிட்டாரா? வேகமாகப் பரவிய செய்தி.. அப்படி விளக்கம் கொடுத்த நடிகை பூமிகா சாவ்லா!

By

சென்னை: தன்னைப் பற்றி பரவிய செய்திக்கு நடிகை பூமிகா சாவ்லா அதிரடியாக விளக்கம் அளித்துள்ளார்.

தமிழில், விஜய்யின் பத்ரி, ரோஜாக் கூட்டம், சில்லுனு ஒரு காதல் உட்பட சில படங்களில் நடித்தவர் பூமிகா சாவ்லா.

யுவகுடு என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் இவர். கடந்த 2000 ஆம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸ் ஆனது.

தோனி பயோபிக்

தோனி பயோபிக்

அடுத்து, கன்னடம், தெலுங்கு, இந்தி என நடித்துள்ள இவர், கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி பயோபிக் படத்தில் நடிகர் சுஷாந்த் சிங்கின் அக்காவாக நடித்திருந்தார். இதில் அவர் நடிப்பு பேசப்பட்டது. 2007 ஆம் ஆண்டு தனது காதலர், யோகா ஆசிரியர் பரத் தாகூரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்.

படங்கள் தயாரிப்பு

படங்கள் தயாரிப்பு

இடையில் சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர், பின்னர் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில் தெலுங்கில் சில படங்களை தயாரித்தார். அவர் தயாரித்தப் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால், தயாரிப்பதை நிறுத்திவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

மறுத்தார் பூமிகா

மறுத்தார் பூமிகா

இந்நிலையில், இவருக்கும் இவர் கணவருக்கும் பிரச்னை என்றும் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாகவும் சில வருடங்களுக்கு முன் தகவல் வெளியானது. இப்போது மீண்டும் அதே போன்ற தகவல் பரபரப்பானது. இது சினிமா வட்டாரத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் இதை மறுத்துள்ளார் பூமிகா சாவ்லா.

வதந்தி பரவியது

வதந்தி பரவியது

அவர் கூறும்போது 'எனது திருமண நாளை இன்று (நேற்று) கொண்டாடினேன். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. இதற்கு முன்பும் எங்கள் திருமண வாழ்க்கை பற்றி வதந்தி பரவியது. அப்போதும் மறுத்தேன். இப்போதும் அதை மறுக்கிறேன்.

நன்றாக இருக்கிறோம்

நன்றாக இருக்கிறோம்

மற்றவர்கள் பரப்பும் தவறான தகவல்களால் எங்கள் வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை. நாங்கள் நன்றாகவே இருக்கிறோம். இவ்வாறு நடிகை பூமிஆ கூறியுள்ளார். இந்நிலையில் தனது திருமண நாளை முன்னிட்டு கணவருக்கு இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உழைப்பு, அர்ப்பணிப்பு

உழைப்பு, அர்ப்பணிப்பு

'ஆயிரம் மைல் பயணம் என்பது ஒரு சின்ன ஸ்டெப்பில் இருந்துதான் தொடங்குகிறது. அன்பு, அது காதல், கற்றுக்கொள்ளுதல், புரிதல், சிரிப்பு மற்றும் சிறந்த தருணங்களின் பயணம். நம் வாழ்க்கைக்கான உங்கள் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் கண்டு பெருமை கொள்கிறேன். கடவுள் அருள் புரியட்டும் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X