»   »  புவனேஸ்வரிக்கு பிடிவாரண்ட்!

புவனேஸ்வரிக்கு பிடிவாரண்ட்!

Subscribe to Oneindia Tamil

செக் மோசடி வழக்கில் விபச்சாரம்- புளூ பிலிம் புகழ் நடிகை புவனேஸ்வரிக்கு சென்னைசைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த கனகதுர்கா என்பவரிடம் புவனேஸ்வரி ரூ. 1.90 லட்சம்பணம் வாங்கியிருந்தார். இந்தப் பணத்தைத் திருப்பித் தருவதற்காக காசோலை ஒன்றை கனகதுர்காவிடம் அவர் கொடுத்துள்ளார்.

ஆனால் புவனேஸ்வரியின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பி வந்துவிட்டது. இதையடுத்து சென்னை சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நீதிமன்றத்தில் கனக துர்காவழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் கடந்த 1ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு புவனேஸ்வரிக்கு நீதிபதி ரவீந்திரன்சம்மன் அனுப்பினார். ஆனால் அவர் வரவில்லை.

இதையடுத்து இன்று (08.03.04) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது புவனேஸ்வரியைகோர்ட்டில்ஆஜர்படுத்துமாறு ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட்டை நீதிபதி ரவீந்திரன்பிறப்பித்து உத்தரவிட்டார்.

ஏற்கனவே விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட புவனேஸ்வரி ஜாமீனில் விடுதலையாகி வழக்குவிசாரணையில் கலந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil