ஸ்ரீதேவியை வாழ்த்த வரலையே அமிதாப்பும், ஷாருக்கும்... ஏன்?

By Sudha

மும்பை: நடிகை ஸ்ரீதேவி தனது 50வது பிறந்த நாளை வெகு விமரிசையாக மும்பையில் கொண்டாடி மகிழ்ந்தார். திரையுலக பிரபலங்கள் பலரும் வந்து பார்த்து அவரை வாழ்த்தினர். ஆனால் பெரிய நடிகர்களான அமிதாப் பச்சனும், ஷாருக்கானும்தான் ஏனோ வரவே இல்லை.

இந்தக் காலத்து ஜெனிலியா முதல் அந்தக் காலத்து ஹேமமாலினி வரை பலரும் வந்து ஸ்ரீதேவியைப் பார்த்தும், வாழ்த்தியும் மகிழ்ந்து சென்றனர்.

ஸ்ரீதேவியுடன் ஜோடி சேர்ந்து நடித்த பல நடிகர்களையும் காண முடிந்தது. ஆனாலும் அமிதாப், ஷாருக் வராததுதான் பலராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

மகள்கள், கணவர் புடை சூழ

மகள்கள், கணவர் புடை சூழ

தனது 50வது பிறந்த நாளை ஆகஸ்ட் 17ம் தேதி மும்பையில் கணவர், குழந்தைகள் புடை சூழ தடபுடலாக கொண்டாடினார் ஸ்ரீதேவி.

கணவர் தங்கையுடன் வந்த ஷில்பா

கணவர் தங்கையுடன் வந்த ஷில்பா

தனது கணவர் ராஜ் குந்த்ரா, தங்கச்சி ஷமீதா ஷெட்டி ஆகியோருடன் வந்து ஸ்ரீதேவியைப் பார்த்து மகிழ்ந்தார் ஷில்பா ஷெட்டி.

வினோத் கண்ணாவின் ஆசி

வினோத் கண்ணாவின் ஆசி

பழம் பெரும் நடிகரான வினோத் கண்ணாவும் பிறந்த நாளுக்கு வந்திருந்து ஸ்ரீதேவியை ஆசிர்வதித்து மகிழ்ந்தார்.

கணவருடன் வந்த ஜெனிலியா

கணவருடன் வந்த ஜெனிலியா

இளம் நடிகை ஜெனிலியா டிசோசா தனது கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் வந்து ஸ்ரீதேவியை வாழ்த்தினார்.

ரந்தீர் கபூர் - ரிஷி கபூர்

ரந்தீர் கபூர் - ரிஷி கபூர்

பழம் பெரும் நடிகர்களும், சகோதரர்களுமான ரந்தீர் கபூர், ரிஷி கபூர் ஆகியோரும் வந்து ஸ்ரீதேவியை வாழ்த்தினர்.

சுஷ்மிதாவும் வந்தாரே

சுஷ்மிதாவும் வந்தாரே

அதேபோல முன்னாள் உலக அழகியும் நடிகையுமான சுஷ்மிதா சென்னும் பிறந்த நாளுக்கு வந்திருந்தார்.

கனவுக் கன்னிகளின் சங்கமம்

கனவுக் கன்னிகளின் சங்கமம்

ஒரு காலத்தில் போட்டி போட்டு நடித்துக் கொண்டிருந்த ஹேமமாலினி வந்திருந்தது அனைவரையும் கவர்ந்தது. ஸ்ரீதேவியும், ஹேமாவும் கை கோர்த்து வாய் விட்டு மனதார சிரித்தபடி புகைப்படங்களுக்குப் போஸ் கொடுத்தனர்.

கொழுந்தன் அனில் கபூர்

கொழுந்தன் அனில் கபூர்

ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பி அனில் கபூரும் வந்து அண்ணியை வாழ்த்தினார். அனிலும், ஸ்ரீதேவியும் இணைந்து மிஸ்டர் இந்தியா படத்தில் நடித்தது நினைவிருக்கலாம்.

மகேஷ் கூட வந்தாரே...

மகேஷ் கூட வந்தாரே...

டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி, மனைவி லாரா தத்தாவுடன் வந்திருந்து ஸ்ரீதேவியைப் பார்த்து மகிழ்ந்தார்.

பெருசு வரலையே...

பெருசு வரலையே...

இத்தனை பேர் வந்திருந்தும் ஸ்ரீதேவியுடன் பல படங்களில் நடித்தவரான சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வரவில்லை. அதேபோல இன்றைய சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும் வரவில்லை. அமிதாப்பின் மருமகள் ஐஸ்வர்யா ராய் வரவில்லை. அவரது கணவர் அபிஷேக் பச்சனும் கூட வரவில்லை.

எதுக்கோ வராம இருந்திருப்பாங்க.. நமக்கென்னத்த தெரியும்...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X