இதுதான் இந்தியாவின் ரம்ஜான்.. மதவாதிகளுக்கு பளார் விட்ட விளம்பரம்.. பாராட்டுகள் குவியுது!

சென்னை: இந்தியா மதச்சார்பின்மை நாடாக உலக அரங்கில் ஜொலித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம். இந்தியாவில் எல்லா மதத்தின் பண்டிகைகளும் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதுவும் அந்தந்த மதத்தைச் சேர்ந்த மக்களால் மட்டும் இல்லாமல், பிற மதத்தை சேர்ந்த மக்களாலும் கொண்டாப்படுகிறது. இது போன்ற கொண்டாட்டங்களை இந்தியா முழுவதும் பார்த்தாலும் தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் இந்த ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை அதிகம் பார்க்க முடியும். அதற்கு மிகவும் முக்கிய காரணமாக இருப்பது, மக்கள் மத்தியில் இருக்கும் அரசியல் விழிப்புணர்வு என்பதைக் கடந்து, சக மனிதனின் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணம் இயல்பிலேயே இருப்பதனால் தான்.

இப்படி இருக்கையில் பிக் பஜார் என்ற நிறுவனம் இந்த ரம்ஜான் மாதத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அவை இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அதாவது அந்த விளம்பரத்தின் கான்செப்ட் என்பது, " இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மருத்துவர், ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்து விட்டு, மாலையில் நோன்பு துறக்க அவரது அறையிலேயே பழங்களை சாப்பிட தொடங்குகிறார். அப்போது செவிலியரும் ஒரு பெண்ணும் ஓடி வந்து, ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி வந்துவிட்டது. எமர்ஜென்சி நீங்கள் வரவேண்டும் என்று கூறுகிறார். செவிலியர் அப்படிச் சொன்னதுமே கொஞ்சம் கூட யோசிக்காமல் எழுந்து வருகிறார் அந்த மருத்துவர்.

Big Bazaar RAMADAN Advertisment Which Attracts Social

ரம்ஜான் விளம்பரம்: நோன்பு துறந்து கொண்டு இருந்த மருத்துவர் எழுந்து வந்ததைப் பார்த்த உடன் வந்த பெண்ணுக்கு அதிர்ச்சி ஆகிவிட்டது. இப்படி இருக்கையில் பிரசவ வலியுடன் வந்த பெண்ணுக்கு குழந்தை நல்லபடியாக பிறக்கிறது. குழந்தையையும் அம்மாவையும் பார்க்க அந்த மருத்துவர் வரும் போது, செவிலியருடன் வந்திருந்த பெண், டாக்டர் நீங்க நோன்பு துறந்து கொண்டு இருந்த போது, எனது மகளுக்கு பிரசவ வலி என்றதும் உடனே எழுந்து வந்துவிட்டீர்கள். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை என்று கூறுகிறார்.

அன்பு: இதைக் கேட்ட அந்த மருத்துவரோ, அதெல்லாம் ஒன்றும் இல்லை அம்மா, முதலில் எனக்கு நீங்கள் தான் முக்கியம் என்று கூறுகிறார். அவ்வாறு மருத்துவர் கூறும் போது, நாங்கள் உங்களுக்காக ஒரு சிறிய ஏற்பாடு செய்துள்ளோம் எனவே நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். அப்போது அந்த அறையிலேயே அந்த பெண் மருத்துவருக்கு பழங்கள் எல்லாம் வைத்து நோன்பு துறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Big Bazaar RAMADAN Advertisment Which Attracts Social

ரம்ஜான்: தனக்காக பழங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை பார்த்து மிகவும் இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகிறார் அந்த மருத்துவர். இதை எப்படி ஏற்பாடு செய்தீர்கள் என்று கேட்டதற்கு, பிக் பஜார் என்ற வணிக நிறுவனத்தின் கை பையைக் காட்டுகிறார்கள். அடுத்ததாக நோன்பு துறக்க அந்த பெண் மருத்துவர் பழங்கள் வைக்கப்பட்டுள்ள மேசைக்கு அருகில் சென்று அமர்கிறார். தான் சாப்பிடுவது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு கொடுக்கிறார், இத்துடன் அந்த விளம்பரம் முடிகிறது. இந்த விளம்பரத்தை பகிர்ந்த இணையவாசிகள் பலரும் இதுதான் இந்தியாவின் ரம்ஜான் என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதேபோல், பலரும் இந்த விளம்பரத்தை பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவின் பன்முகத்தன்மையை சீர்குலைக்க பல மதவாதிகள் இன்றைக்கு முயற்சி எடுத்து வரும் நிலையில் அவர்களுக்கு எல்லாம் பளார் விட்டது போல இருக்கிறது இந்த விளம்பரம் என்று பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X