கமல் செய்த ரெக்கமண்டேஷன்.. இந்தியன் 2 படத்தில் நடிக்கும் தர்ஷன்? தோல்வியிலும் கிடைத்த மாஸ் வெற்றி!
பிக்பாஸ் தர்ஷன் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
Recommended Video
சென்னை: பிக்பாஸ் தர்ஷன் நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
பிக்பாஸ் சீசன் 3 மூலம் தமிழகம் முழுக்க பிரபலம் அடைந்தவர் தர்ஷன். இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவர் இதற்கு முன் மாடலிங், விளம்பரம் உட்பட பல்வேறு பணிகளை செய்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு நிறைய ஆதரவு கிடைத்தது. இவருக்கு பல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சி மூலம் உருவானார்கள்.

ஆனால் என்ன
ஆனால் யாருமே எதிர்பார்க்காமல் திடீர் என்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேற்றப்பட்டார். மக்கள் ஆதரவு இவருக்கு அதிகமாக இருந்தது. ஆனாலும் கூட நிகழ்ச்சியில் இருந்து இவர் கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டார்.

விமர்சனம்
இவர்தான் இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெறுவார் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீர் என்று இவர் வெளியேற்றப்பட்டார். இது பெரிய அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

நடிக்கிறார்
இவரும் வெளியே வந்த பின் மக்களுக்கு நன்றி சொல்லி வீடியோ வெளியிட்டார். இவ்வளவு பேர் தனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. நான் டைட்டில் வெல்லவில்லை. ஆனால் வெளியே நிறைய மக்களை வென்று இருக்கிறேன் என்று தர்ஷன் குறிப்பிட்டு இருந்தார்.

தர்ஷன் எப்படி
இந்த நிலையில் தர்ஷன், தற்போது நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆம், இந்தியன் 2 படத்தில் இளம் நடிகர் ஒருவரை நடிக்க வைக்க ஷங்கர் தேடி வருகிறார். இந்த ரோலுக்கு கமல்ஹாசன் தர்ஷன் பெயரை பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்னும் சில
ஆனால் இந்த செய்தி இன்னும் உறுதியாக வெளியாகவில்லை. மேலும் தர்ஷன் இன்னும் சில படங்களில் கமிட் ஆகி இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்த வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











