Big Boss 7 - வீடும் மாறியிருக்கு ரூல்ஸும் மாறியிருக்கு .. களைகட்டும் பிக்பாஸ் 7.. அசத்தல் ப்ரோமோ

சென்னை: Big Boss 7 Promo (பிக்பாஸ் 7 ப்ரோமோ) பிக்பாஸ் ஏழாவது சீசன் இன்று மாலை தொடங்கவிருக்கும் சூழலில் அதுகுறித்த ப்ரோமோ வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் வெகு பிரபலமாகியிருக்கிறது. இதுவரை நடந்து முடிந்த ஆறு சீசன்களுக்கும் மக்கள் பெரும் வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். கடந்த சீசனில் அசீம் டைட்டில் வின்னரானார். விக்ரமன் இரண்டாவது இடத்தையும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். சூழல் இப்படி இருக்க பிக்பாஸ் ஏழாவது சீசன் குறித்து மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

 Big Boss 7 New Promo Was out now

பிக்பாஸ் 7: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் இன்று முதல் தொடங்கவிருக்கிறது. இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியானது. எப்போதும் ஒரு வீட்டில் நடக்கும் பிக்பாஸ் இந்த முறை இரண்டு வீடுகளில் நடக்கப்போகிறது. இரண்டு வீடுகளில் பிக்பாஸ் போட்டி எப்படி நடைபெறும்; ஏதேனும் ரூல்ஸ் மாறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.

லிஸ்ட் இதுவா?: பிக்பாஸ் ஏழாவது சீசனில் நடிகர் அப்பாஸ், இந்திரஜா, ரேகா நாயர் உள்ளிட்ட 20 பேர் கலந்துகொள்வார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அப்பாஸ், ரேகாநாயர் கலந்துகொள்ளவில்லை என்றும் மாறாக கூல் சுரேஷ், நடிகர் பப்லு, நடிகை விசித்ரா, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா தேவி, குக் வித் கோமாளி பிரபலம் நடிகை தர்ஷா குப்தா, மாடல் நடிகை அனன்யா ராவ்,

பாடகர் யுகேந்திரன், வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா, சீரியல் நடிகை ரவீனா, விஜே அர்ச்சனா, நடனக் கலைஞர் விஜய் வர்மா, ரியாஸ்கான் மனைவி நடிகை உமா ரியாஸ், சுழல் வெப்சீரிஸ் நடிகர் ஜான்சன், காமெடி நடிகர் பாலசரவணன், பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் சரவண விக்ரம், விஷ்ணு, நடிகர் சத்யா உள்ளிட்ட 20 பேர் கலந்துகொள்வார்கள் என்று தெரிகிறது. இவர்களில் பெரும்பாலானோர் உறுதியானவர்கள் என கூறப்படுகிறது.

ப்ரோமோ: இந்நிலையில் பிக்பாஸ் ஏழாவது சீசனுக்கான புதிய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. கமல் ஹாசன் தோன்றும் அந்த ப்ரோமோவில், வீடும் புதுசு விதியும் மாறியிருக்கு விளையாட்டும் மாறப்போகிறது. பிக்பாஸ் சீசன் 7 இன்று மாலை தொடங்குகிறது என கூறியுள்ளார். எனவே இரண்டு வீடுகளில் நடப்பதால் ரூல்ஸ்கள் மாறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்த சூழலில் அதை இந்த ப்ரோமோ உறுதி செய்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X