பஞ்சதந்திர காயின் டாஸ்க்... சலுகையை வாரி வழங்கிய பிக் பாஸ்... காண்டான அபிஷேக் !
சென்னை : பஞ்சதந்திர டாஸ்க்கில் திருடி திருடி சண்டைப் போட்டு விளையாடியதற்கு கை மேல் பலன் கிடைத்துள்ளது.
இந்த நாணயத்தை வைத்து இருப்பவர்களுக்கு சூப்பரான சலுகைகளை பிக் பாஸ் கொடுத்துள்ளார்.
வருண், தாமரைசெல்வி, நிரூப், இசைவாணி, பவானி ஆகியோர் நாணயத்தை வைத்துள்ளனர்.

பஞ்சதந்திர டாஸ்க்
பஞ்சதந்திர டாஸ்க், ஏகப்பட்ட குழப்பத்துடன் நேற்று முடிவடைந்தது. இதையடுத்து, அந்த நாணயத்தை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடம் பிரிக்கப்பட்டது. அந்த இடத்தில் தான் நாணயம் வைத்து இருப்பவர்கள் இருக்க வேண்டும், அந்த இடத்திற்கு வேறு ஒரு நபர் வந்தால் அந்த நாணயம் வைத்திருப்பவர் சொல்லும் டாஸ்கை செய்துவிட்டு தான் வரவேண்டும் என்று நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் கூடியிருந்தார்.

நாணயத்தின் சலுகை
இதையடுத்து, நாணயங்களை யார் வைத்துள்ளார்களோ? அவர்களுக்கு சூப்பரான ஒரு சலுகையை பிக் பாஸ் அறிவித்துள்ளார். அதில். நாணயம் வைத்திருக்கும் நபர்கள் தங்களையோ, தான் விரும்பும் நபரையோ காப்பாற்றலாம். அதே போல் தலைவர் போட்டியில் தேர்வான நபரின் பதவியை நாணயம் வைத்துக்கும் நபர் பறித்து தனக்கு வேண்டிய ஒரு நபரையோ அல்லது தன்னையோ வீட்டின் தலைவராக நியமிக்கலாம் என்று கூறியுள்ளார்.

ஒருமுறை பயன்படுத்தலாம்
இந்த இரண்டு சலுகைகளை இந்த நிகழ்ச்சியின் 10வாரம் வரை எப்போது வேண்டுமானாலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளலாம். இப்போதிலிருந்து வரும் 5 வாரங்களுக்கு, ஒவ்வொரு வாரமும் ஒரு பஞ்சபூதத்தின் ஆற்றலை சார்ந்தே இருக்கும், எந்த நாணயத்தில் ஆற்றல் அந்த வீட்டில் இருக்கிறதோ அந்த நபருக்கு அந்த வீட்டில் தனி ஆளுமை இருக்கும். மேலும் இந்த நாணயத்தை வைத்து இருக்கும் நபருக்கு அவ்வப்போது சலுகைகள் அறிவிக்கப்படும் என்றார்

இதை பிக் பாஸ்
பிக்பாஸ் இதை சொன்னவுடன் அபிஷேக் வழக்கம்போல் தன்னுடைய வேலையை காண்பித்து வருகிறார். யார் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்? யார் காப்பாற்றப் படுகிறார்? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











