புது கார் வாங்கிய பிக் பாஸ் பிரபலம் ஆஜித்.. எவ்ளோ விலை தெரியுமா?

சென்னை : விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆஜித்.

இவர் கடந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.

சமூக வலைதளங்களிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆஜித் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.

 விஜய் டிவி நிகழ்ச்சிகள்

விஜய் டிவி நிகழ்ச்சிகள்

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் பலருக்கு சிறப்பான முகவரியை அமைத்து கொடுத்து வருகிறது. இந்த சேனலின் பிக் பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். விரைவில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறைவடையவுள்ள நிலையில், பிக் பாஸ் சீசன் 6 துவங்கவுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்கிய நிலையில் இடையிலேயே தன்னுடைய சூட்டிங் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி விலகினார். தொடர்ந்து நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

விரைவில் பிக்பாஸ் 6வது சீசன்

விரைவில் பிக்பாஸ் 6வது சீசன்

இந்நிலையில் விரைவில் இந்த நிகழ்ச்சியின் அடுத்த சீசன் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. நிகழ்ச்சி விரைவில் துவங்கும் என்றும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

5வது சீசனில் பங்கேற்ற ஆஜித்

5வது சீசனில் பங்கேற்ற ஆஜித்

இந்த நிகழ்ச்சியின் 5வது சீசனில் பங்கேற்று சிறப்பான பங்களிப்பை கொடுத்திருந்தார் ஆஜித். இவர் முன்னதாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று அதன்மூலம் பிரபலமடைந்தவர். தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சி இவரை ஏராளமான ரசிகர்களிடையே கொண்டு சேர்த்துள்ளது.

 இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஆஜித் காலிக். தொடர்ந்து வீடியோக்கள், புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தன்னுடைய சிறப்பான பயணங்களின் வீடியோக்களைவும் இவர் பதிவிட்டுள்ளார். மேலும் யூடியூப் பக்கத்தையும் இவர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

புது கார் வாங்கிய ஆஜித்

புது கார் வாங்கிய ஆஜித்


இந்நிலையில் தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார் ஆஜித். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன்மூலம் இவருக்கு அதிகமான சம்பளம் கிடைத்த நிலையில் அதைக்கொண்டு தற்போது விலையுயர்ந்த ஸ்கோடா ஸ்லாவியா காரை வாங்கியுள்ளார். இந்தக் கார் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 புகைப்படங்கள் பகிர்வு

புகைப்படங்கள் பகிர்வு

மேலும் இந்தக் காருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்த காரின் விலை அதிகம் எல்லாம் ஒன்றுமில்லை. 22 லட்சம் ரூபாய் மட்டுமே. தற்போது இவருக்கு நெட்டிசன்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X