கல்யாணத்திற்கு முன்பே ஜாலி ட்ரிப்.. வெளிநாடு பறந்த அமீர் -பாவ்னி!

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜோடி அமீர் மற்றும் பாவ்னி.

இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய காதலை பாவ்னியிடம் அமீர் சொன்ன நிலையில் அதை பாவ்னி ஏற்கவில்லை.

இதனிடையே மீண்டும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்ற நிலையில் அமீர் காதலை ஏற்றுக் கொண்டார் பாவ்னி.

நடிகை பாவ்னி

நடிகை பாவ்னி

லாகின் என்ற இந்திப்படம் மூலம் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்த நடிகை பாவ்னி, தொடர்ந்து தமிழில் ரெட்டை வால் குருவி என்ற தொடரில் நடித்தார். மொட்டை சிவா கெட்ட சிவா என்ற படத்திலும் நடித்திருக்கிறார். ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

பாவ்னியுடன் அமீர் காதல்

பாவ்னியுடன் அமீர் காதல்

இந்த சீசனில் வைல்ட் கார்ட் மூலம் நுழைந்த அமீர், பாவ்னியுடன் காதல் வசப்பட்டு அதை வெளிப்படுத்தினார். ஆனால் ஏற்கனவே தன்னுடைய முதல் கணவரை இழந்த பாவ்னி, இந்தக் காதலை ஏற்கவில்லை. ஆனாலும் அமீர் தன்னுடைய காதலில் இருந்து பின்வாங்கவில்லை. தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகள் மூலம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார்.

நட்பை தொடர்ந்த ஜோடி

நட்பை தொடர்ந்த ஜோடி

இவர்கள் இருவரும் எப்போது காதலை உறுதிப்படுத்துவார்கள் என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினாலும் தொடர்ந்து தங்களின் நட்பை தொடர்ந்தது இந்த ஜோடி. அமீரின் பிறந்தநாளை நிகழ்ச்சியில் நேரில் சென்று வாழ்த்தினார் பாவ்னி.

காதலை உறுதி செய்த பாவ்னி

காதலை உறுதி செய்த பாவ்னி

இதை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் இணைந்தனர். நிகழ்ச்சியில் பாவ்னியால் அமீரின் நடனத்துடன் இணைந்து செயல்பட முடியாவிட்டாலும் அவருக்கும் சேர்த்து அமீர் பர்பார்மென்ஸ் கொடுத்து டைட்டிலை வெற்றிப் பெற காரணமாக அமைந்தார். இதன்மூலம் பாவ்னியின் காதலையும் வென்றார்.

அமீர் -பாவ்னி துபாய் பயணம்

அமீர் -பாவ்னி துபாய் பயணம்

இவர்களின் திருமணம் விரைவில் நடக்கும் என்றும் அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக தற்போது வெளிநாட்டிற்கு இந்த ஜோடி பயணம் மேற்கொண்டுள்ளது. துபாய் விமானத்தில் பயணம் செல்லும் புகைப்படத்தை தற்போது பாவ்னி வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் ஜோடி

பிக்பாஸ் ஜோடி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மோதல், சண்டை, பரபரப்பு மட்டுமில்லாமல் காதலும் காணப்படும். 100 நாட்கள் ஒரே வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள், சக போட்டியாளர்கள் மீது காதலிப்பது சகஜமாக நடைபெறும். அந்த வகையில் அமீர் -பாவ்னி இந்த நிகழ்ச்சிமூலம் காதல் வசப்பட்டு விரைவில் திருமணம் செய்ய உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X