அஸ்கு மாரோ பாடலுக்காக கவினை பாராட்டிய தளபதி விஜய்... பீஸ்ட் செட்டில் அப்டேட்

சென்னை : விஜய் மற்றும் பூஜா ஹெக்டே லீட் கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் பீஸ்ட்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் நடிகர் கவின் அசிஸ்டெண்ட் டைரக்டராக செயல்பட்டு வருகிறார்.

பீஸ்ட் படம்

பீஸ்ட் படம்

நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே லீட் கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் பீஸ்ட். இந்த படத்தின் தலைப்பு உள்ளிட்டவை சமீபத்தில் விஜய் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தின. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜியார்ஜியாவில் நடந்து முடிந்துள்ளது.

பாடல் காட்சி படப்பிடிப்பு

பாடல் காட்சி படப்பிடிப்பு

இதையடுத்து கடந்த 1ம் தேதி சென்னையில் இதன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் விஜய், பூஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். முதல்கட்டமாக இருவரும் பங்கேற்கும் பாடல் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

Recommended Video

Ramya Pandian அட்டகாசமான Photoshoot | அழகின் ரகசியம் இதுதானா?
விஜய் குறித்து பாராட்டு

விஜய் குறித்து பாராட்டு

இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் கவின் உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறார். சூட்டிங் துவங்கியதில் இருந்து தளபதி விஜய் செட்டில் இருப்பவர்கள் அனைவரையும் மிகவும் பாதுகாப்பாக உணர செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் நெல்சன் திலீப்குமாருடனான இந்த பயணம் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாராட்டிய விஜய்

பாராட்டிய விஜய்

இதனிடையே, அஸ்கு மாரோ என்ற வீடியோ பாடலில் அவர் நடித்திருந்தார். இந்த பாடல் சிறப்பான வரவேற்பையும் அதிக வியூஸ்களையும் பெற்றிருந்தது. இந்நிலையில் இந்த பாடல் குறித்து நடிகர் விஜய் தனக்கு பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X