அமீர் -பாவனி காதல் குறித்த விமர்சனங்கள்.. பதிலடி கொடுத்த பாவனி!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பாவனியிடம் தன்னுடைய காதலை தெரிவித்த அமீர், அவரது சம்மதத்தையும் பெற்றுள்ளார்.
விரைவில் தங்களது காதல் திருமணத்தில் முடியவுள்ளதாக இருவரும் அறிவித்துள்ளனர். ஆனால் அதற்கு சிறிது காலம் ஆகும் என்றும் கூறியுள்ளனர்.
இதனிடையே இருவரும் ஜோடியாக வெளிநாடுகளிலும் சுற்றுலா கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமீர் -பாவனி ஜோடி
விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் சீரியல் நடிகையாக நுழைந்தவர் பாவனி. இதேபோல நடன இயக்குநராக நிகழ்ச்சியில் இடையில் நுழைந்தார் அமீர். இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய கணவரின் தற்கொலை குறித்து வருத்தத்துடன் பகிர்ந்துக் கொண்டார் பாவனி. இதையடுத்து அவரை காதலிப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார் அமீர்.

திருமணம் குறித்து உறுதி
அமீரின் காதலை முதலில் பாவனி ஏற்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இருவரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வெற்றி பெற்றனர். இதை தொடர்ந்து அமீரின் காதலை மேடையிலேயே பாவனி உறுதி செய்தார். தொடர்ந்து இருவரும் தங்களது திருமணம் குறித்து கடந்த காதலர் தினத்தில் உறுதி செய்துள்ளனர். இருவரும் இணைந்து அஜித்தின் துணிவு படத்திலும் நடித்துள்ளனர்.

வெளிநாட்டு சுற்றுலா
இருவரும் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளதாகவும் ஆனால் அதற்கு சிறிது காலம் ஆகும் என்றும் இருவரும் கூட்டாக அறிவித்தனர். ஆனால் அமீருடன் இணைந்து வெளிநாட்டு சுற்றுலா கொண்டாட்டத்தில் பாவனி ஈடுபட்டுள்ளார். திருமணத்திற்கு முன்பே இவ்வாறு நடந்துக் கொள்வது குறித்தும் பாவனியின் திருமணம் குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை செய்து வருகின்றனர்.

விமர்சனங்களுக்கு பதிலடி
இந்நிலையில் தன்மீது செய்யப்படும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பாவனி, புதிய பதிவினை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே திருமணமான பெண்ணை ஒரு ஆண் திருமணம் செய்தால் அதுகுறித்து அனைவரும் பேசுகிறார்கள். ஆனால் விவாகரத்தான ஒரு ஆண், திருமணம் செய்தால் அவரது விவாகரத்து குறித்து கூட மற்றவர்களுக்கு தெரியாது என்று அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமர்சனங்கள் ஏற்படுத்திய காயம்
அமீரின் காதலை மிகுந்த தயக்கத்துடன்தான் ஒப்புக் கொண்டார் பாவனி. அந்த அளவிற்கு அவர் மீதான விமர்சனங்களுக்கு அவர் பதில் கொடுக்க வேண்டியதாக இருந்தது. இந்நிலையில், தற்போது இந்தப் பதிவு, அவர்மீது வைக்கப்படும் விமர்சனங்கள் அவரை எந்த அளவிற்கு காயப்படுத்தியுள்ளது என்பதை தெரிய வைத்துள்ளது.

ரசிகர்களுக்கு பிடித்த ஜோடி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பாவனி ஏற்கனவே திருமணமானவர் என்பது தெரிந்தும் தன்னுடைய காதலை சிறப்பாக வெளிப்படுத்தினார் அமீர். பாவனி தன்னுடைய காதலை ஏற்காத நிலையிலும் தன்னுடைய காதலில் உறுதியாக இருந்தார். தொடர்ந்து பாவனியின் அன்பையும் பெற்றுள்ளார். இந்த ஜோடி ரசிகர்களின் விருப்பத்திற்குரியதாக உள்ளது.


Click it and Unblock the Notifications











