»   »  ரொம்ப ஓவராத் தான் போறாங்க: பிக் பாஸை கழுவி ஊத்தும் நெட்டிசன்ஸ்

ரொம்ப ஓவராத் தான் போறாங்க: பிக் பாஸை கழுவி ஊத்தும் நெட்டிசன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்களை எல்லாம் பார்த்து மக்கள் கடுப்பாகியுள்ளனர்.

கமல் ஹாஸன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக் பாஸ் வீட்டில் நமீதா, ஓவியா, அனுயா, கஞ்சா கருப்பு, வையாபுரி, சக்தி உள்ளிட்ட 15 பேர் தங்கியுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் நடக்கும் சம்பவங்களை எல்லாம் பார்த்து மக்கள் செம கடுப்பில் உள்ளனர்.

என்ன கருமம் டா இது?

என்ன கருமம் டா இது?

ஜூலி என்னவென்றால் கட்டிப்பிடிக்க ஆளில்லை என்று ஃபீல் பண்ணினார், ஓவியாவோ கொஞ்சமும் கூச்சம் இன்றி வா காதலிக்கலாம் என்கிறார். இன்னும் என்னென்ன கருமம் எல்லாம் பிக் பாஸ் வீட்டில் நடக்கப் போகுதோ?

ஓவியா

#BiggBossTamil ஓவியாவுக்கும், ஜூலிக்கும் வேறு வேலை இல்லையா. எப்பொழுது பார்த்தாலும் பாடுகிறார்கள். தயவு செய்து நிறுத்துங்கள் இது பாட்டு பாடும் நிகழ்ச்சி அல்ல என ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

கமல்

பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவிக் கழுவி ஊத்தும் மக்கள் கமல் ஹாஸனையும் விட்டு வைக்கவில்லை. ஏன் சார், உங்களுக்கு இந்த வேலை என்று கேட்கிறார்கள்.

பார்க்காதீங்க

#என்னை_கட்டிப்பிடிக்க_ஆளில்லை கட்டிபிடி மந்திரம் தந்தவர் தானே உலக நாயகன் தேவையா பிக்பாஸ் பார்க்காதீங்க ரொம்ப ஓவரா இருக்கு

English summary
Big Boss tamil show has irked the viewers who took to social media to troll the reality show.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil