Leo Vijay - விஜய்யுடன் அதிக நேரத்தை செலவழிக்கும் பிக்பாஸ் பிரபலம் - ஆச்சரியத்தில் கோலிவுட்
சென்னை: பையனூர் ஷெட்யூலை முடித்துவிட்டு லியோ படக்குழு மீண்டும் ஸ்டூடியோவுக்குள் ஷூட்டிங்கை தொடங்குகிறது. அதன்படி ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் செட் போடும் பணிகள் மும்முரமடைந்துள்ளன
விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் - லோகேஷ் இணைந்திருப்பதாலும், விக்ரம் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

லியோ ஷூட்டிங்: லியோ படத்தின் ஷூட்டிங் இரண்டு மாதங்களாக காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்தது. அங்கு விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. காஷ்மீரில் நடந்த ஷூட்டிங் தொடர்பாக லியோ படக்குழு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ வழக்கமான மேக்கிங் வீடியோவாக இல்லாமல், படத்தில் பணியாற்றிய கடைநிலை ஊழியர்கள் சம்பந்தமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது ஒட்டுமொத்த கோலிவுட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றது.
சென்னையில் ஷூட்டிங்: காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழு குட்டி ரெஸ்ட் எடுத்தது. அதனையடுத்து சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் செட் போட்டு சில வாரங்கள் மும்முரமாக படப்பிடிப்பு நடந்தது. அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது சென்னை பையனூரில் ஷூட்டிங் நடந்துவருவதாகவும், அங்கு ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்படுகின்றன எனவும் கூறப்படுகிறது.

அடுத்தது எங்கு ஷூட்டிங்: பையனூர் ஷெட்யூலை முடித்துவிட்டு லியோ படக்குழு மீண்டும் ஸ்டூடியோவுக்குள் ஷூட்டிங்கை தொடங்குகிறது. அதன்படி ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் செட் போடும் பணிகள் மும்முரமடைந்துள்ளன. இந்த செட்டில்தான் ஆக்ஷன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்டோருக்கான காட்சிகள் படமாக்கப்படும் என்ற புதிய தகவலும் சில நாட்களாக உலாவி வருகிறது. அதுமட்டுமின்றி விஜய்யும் அந்த செட்டில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்பாஸ் ஜனனி: இதற்கிடையே லியோ படத்தில் பெரிய திரை பிரபலங்கள் மட்டுமின்றி சின்னத்திரை பிரபலங்களும் நடிக்கின்றனர். அந்தவகையில் நடந்து முடிந்த பிக்பாஸ் ஆறாவது சீசனில் கலந்துகொண்ட ஜனனியும் லியோ படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு விஜய்யுடன் அதிக நேரம் வரக்கூடிய வகையில் கதாபாத்திரம் லியோவில் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கான ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்திருக்கிறது.
பிக்பாஸ் மூலம் புகழடைந்து இப்போது லியோவில் விஜய்யுடன் பெரும்பாலும் வருவதுபோன்ற காட்சிகள் கிடைத்து அதில் நடித்து முடித்திருக்கும் ஜனனிக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்துவருகின்றனர். அதுமட்டுமின்றி முதல் படத்திலேயே விஜய்யுடன் அதிகம் வருவது போன்ற காட்சிகள் ஜனனிக்கு கிடைத்திருப்பதாக வெளியான தகவலை கேட்டு கோலிவுட் ஆச்சரியப்பட்டிருக்கிறது.

2000 டான்ஸர்கள்: முன்னதகா, படத்தில் ஒரு பாடலுக்கான ஷூட்டிங் ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் நடைபெறவிருக்கிறதா. அதாவது அந்தப் பாடலுக்கு 2000 டான்ஸர்கள் பயன்படுத்தப்படவிருக்கிறார்களாம். அதற்காக மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து நடன கலைஞர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். இந்தப் பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் கோரியோகிராஃபி செய்யவிருக்கிறார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











