உருகும் மெழுகுவர்த்தியுடன் ஒரு போட்டோஷூட்… அசத்திய பிக் பாஸ் ஜூலி !

சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான ஜூலி அனைவரும் வாயடைத்து போகும் வகையில் மெழுகுவர்த்தி போட்டோஷூட் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

Recommended Video

Shivani, Darshan, Reshma Trends of Lockdown • Motta Maadi Photoshoot

நெட்டிசன்களால் பங்கமாக கலாய்க்கப்பட்டு மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவர் பிக்பாஸ் புகழ் ஜூலி. இவர் தற்போது தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது திடீரென அறிவிப்புகளை அறிவித்து வரும் ஜூலியின் இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் மிக வேகமாக பரவி வைரலாகி வருகிறது.

முதல் சீசனிலிலேயே

முதல் சீசனிலிலேயே

இந்தியில் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மிகப் பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து தமிழிலும் ஓரிரு ஆண்டுகளுக்கு முன் இந்த ரியாலிட்டி ஷோ தொடங்கியது. அந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தொகுத்து வழங்கி கொண்டு வருகிறார். நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலமானவர்கள் கலந்து கொள்ளும் இந்த ஷோவில் முதல் சீசனிலிலேயே அதிரடியாக களம் இறங்கியவர் ஜூலி.

ஆரம்பத்தில் ஆதரவு கொடுத்து

ஆரம்பத்தில் ஆதரவு கொடுத்து

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஜூலி, அனைவராலும் பாராட்டப்பட்டு நற்பெயரை பெற்றிருந்தார். அவ்வாறு நற் பெயருடன் வலம் வந்த ஜூலிக்கு பிக்பாஸால் வந்த வாய்ப்பு ஆப்பு வைத்தது. ஜூலி பிக்பாஸில் கலந்து கொள்வதை அறிந்த மக்கள் பலரும் மிகவும் ஆர்வத்துடன் அவருக்கு ஆரம்பத்தில் ஆதரவு கொடுத்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் ஜூலியின் பெயர் கண்டமேனிக்கு டேமேஜ் ஆனது.

கழுவி ஊற்றப்படும் நபராக

கழுவி ஊற்றப்படும் நபராக

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத்தமிழச்சி, பொண்ணுன்னா இப்படித்தான் தைரியமா இருக்கணும் என பலராலும் முன்னுதாரணமாக சொல்லப்பட்ட ஜூலி, பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பலராலும் கழுவி ஊற்றப்படும் ஒரு நபராக மாறினார். எனினும் ஒரு தரப்பு ஜூலியை கடுமையாக கலாய்த்து வந்தாலும் மற்றொரு தரப்பு ஜூலிக்கு தொடர்ந்து ஆதரவளித்து கொண்டே வருகிறது.

திரைத்துறையில் கவனம்

திரைத்துறையில் கவனம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் செவிலியராக பணியாற்றி வந்த ஜூலி, அதன்பின் மிகப் பெரிய புகழை அடைந்ததையொட்டி திரைத்துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். என்னதான் பலராலும் கழுவி ஊற்றப்படும் ஒரு நபராக ஜூலி இருந்தாலும் தொடர்ந்து திரைப்படங்களிலும், பல விளம்பரங்களிலும், நடித்துக்கொண்டு தற்போதும் பிஸியாக இருக்கிறார்.

அம்மன் தாயி

அம்மன் தாயி

அவ்வாறு திரைத் துறையில் வெற்றிகரமாக வலம் வர நினைத்த ஜூலி விமல் நடித்த மன்னர் வகையறா திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்ததை தொடர்ந்து தற்போது அம்மன் தாயி, அனிதா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அடிக்கடி திடீர் அறிவிப்புகளை அறிவித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஜூலி சமீபகாலமாக பல விதங்களில் ரக ரகமான போட்டோ ஷூட் எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

மெழுகுவர்த்தி போட்டோ ஷூட்

மெழுகுவர்த்தி போட்டோ ஷூட்

அந்த வகையில் சமீபத்தில் மெழுகுவர்த்தி போட்டோ ஷூட் ஒன்று தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கவர்ச்சியான சிங்கிள் பீஸ் உடை அணிந்து கொண்டு தோள்பட்டையில் சுடச்சுட மெழுகுவர்த்தியின் துளிகளை சிதற விட்டு அதில் லாவகமாக அந்த மெழுகுவர்த்தியை நிற்கவைத்து, இதுவரை பலரும் பார்த்திராத வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த வித்தியாசமான போட்டோஷூட் பலரையும் கவர்ந்து பாராட்டுக்களைப் பெற்று வரும் நிலையில், அதே சமயம் வழக்கம்போல் கேலி கிண்டல்களுக்கும் ஆளாகியுள்ளது.

More from Filmibeat

Read more about: big boss julie ஜூலி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X