ஓவியா மீது செம காண்டில் இருக்கும் பிக்பாஸ் நட்சத்திரங்கள்
Recommended Video

'நாங்களும் கலராத் தானடா இருக்கோம்... எங்களை ஒருத்தி கூட பார்க்க மாட்றா...' என்று சசிக்குமார் சுப்ரமணியபுரம் படத்தில் ஜெய்யிடம் கேட்பார். ஜெய் அதற்கு பதிலாக 'மூஞ்சியை உம்முன்னே வெச்சிருந்தா எந்த புள்ளைக்காவது புடிக்குமா?' என்று கேட்பார்.
அதுபோலத்தான் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஓவியா தவிர மற்றவர்கள் 'நாங்களும் பிக்பாஸ் வீட்டுல தானே இருந்தோம்?' என்று பொறாமையோடு கேட்கிறார்களாம்.

பிக்பாஸ் மூலம் அதிக புகழ் அடைந்தவர் என்றால் அது ஓவியாதான். டைட்டிலில் வெற்றி பெற்ற ஆரவ்வைக் கூட மறந்துவிட்டார்கள். ஓவியாவை செல்லாக்குட்டியாகவே பார்க்கிறார்கள். இதனால் ஓவியாவுக்கு மார்க்கெட் கூடுகிறது. பட வாய்ப்புகளும் விளம்பர வாய்ப்புகளும் குவிகின்றன.
ஆனால் மற்ற நட்சத்திரங்களுக்கு இப்படி எந்தவித ஏற்றமோ மாற்றமோ இல்லை. இதனால் பிந்து மாதவி உள்ளிட்ட மற்ற நட்சத்திரங்களுக்கு ஓவியா மீது செம காண்டாம்.
ஆனாலும் வெளிகாட்டிக்கொள்ளாமல் ஓவியாவை அவர்களும் புகழ்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











