கன்ட்ரி கிளப்பின் நவராத்திரி உத்சவ்: கலக்கும் பிக் பாஸ் சாக்ஷி

சென்னை: கன்ட்ரி கிளப் நடத்தும் நவராத்திரி உத்சவ் நிகழ்ச்சியில் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3 புகழ் சாக்ஷி அகர்வால் உள்பட மற்ற பிரபலங்களும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

இந்தியாவின் பாரம்பரிய பண்டிகைகளான நவராத்திரி, ஹோலி, ரம்ஜான் போன்ற பண்டிகைகளை ஒரு விழாக்களை போல் கொண்டாடிவருகிறது கன்ட்ரி கிளப் ஹாஸ்பிடாலிட்டி ஹாலிடே நிறுவனம் (Country Club Hospitality and Holidays Limited).

Big Boss Sakshi Agarwal attending the Navratri Utsav 2019 event

இந்த ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி தொடங்கவுள்ள ஆசியாவின் மிகப்பெரிய நவராத்திரி உத்சவ்-2019 நிகழ்வில் சாக்ஸி அகர்வால் உள்பட பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற பிரபலங்கள் என எராளமானோர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

கன்ட்ரி கிளப் ஹாஸ்பிடாலிட்டி ஹாலிடே நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் ரெட்டி கூறுகையில், ஆசியாவிலேயே மிகப்பெரிய நவராத்திரி உத்சவாக கொண்டாடுவதற்கு காரணம், நவராத்திரி பண்டிகை மிகவும் மகிழ்ச்சியான பண்டிகைகளில் ஒன்று என்றும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கோலாகலமாக கொண்டாடப்படும் நிகழ்வுகளில் ஒன்று என்றார்.

Big Boss Sakshi Agarwal attending the Navratri Utsav 2019 event

கன்ட்ரி கிளப் ஹாஸ்பிடாலிட்டி ஹாலிடே நிறுவனம் நடத்தும் இந்த பிரமாண்ட நவராத்திரி உத்சவில் பிரபல நடிகை சாக்ஷி அகர்வால் கலந்துகொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளது மேலும் சிறப்பு சேர்க்கும் என்றார். மேலும் இந்த நிகழ்வில் கலந்துகொள்வது குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறு மகிழ்ச்சிகளை தரும் என்றார்.

Big Boss Sakshi Agarwal attending the Navratri Utsav 2019 event

தொடர்ந்து பேசிய நடிகை சாக்ஷி அகர்வால், இந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் பங்கேற்று மகிழுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். நவராத்திரி என்றாலே, கொலு, நடனம், கலை நிகழ்ச்சிகள் கொண்டாட்டங்கள் என ஒரு குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டு கொண்டாடும் நிகழ்வு போன்று இருக்கும் என்றார். ஆண்டுதோறும் கன்ட்ரி கிளப் ஹாஸ்பிடாலிட்டி ஹாலிடே நிறுவனம் இந்த நவராத்திரி கொண்டாட்டத்தை விமர்சையாக கொண்டாடி வருவதாக கூறினார்.

Big Boss Sakshi Agarwal attending the Navratri Utsav 2019 event

கன்ட்ரி கிளப் ஹாஸ்பிடாலிட்டி ஹாலிடே நிறுவனத்துக்கு இந்தியா மட்டுமின்றி, இலங்கை துபாய் போன்ற நாடுகளில் 53 இடங்களில் கிளைகள் உள்ளன. சுமார் 4 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இது இந்தியாவிலேயே அதிக உறுப்பினர்களை கொண்ட கிளப் என்று லிம்கா புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X