»   »  அழுகை, பேக்கப் டிராமா: அரைச்ச மாவையே திரும்பத் திரும்ப அரைக்கும் பிக் பாஸ்

அழுகை, பேக்கப் டிராமா: அரைச்ச மாவையே திரும்பத் திரும்ப அரைக்கும் பிக் பாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக்க யாரையாவது அழ விடுகிறார்கள் இல்லை என்றால் கிளம்பிப் போய்விடுவேன் என்று நடிக்கவிடுகிறார்கள்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சி சூப்பர் ஹிட்டானது. அடுத்தவர்களின் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வமே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு வழிவகுக்கிறது.

இதை நாங்க சொல்லவில்லை தமிழ் பிக் பாஸில் கலந்து கொண்ட அனுயா தெரிவித்துள்ளார்.

மொழி

மொழி

பிக் பாஸ் வீட்டில் கண்டிப்பாக தமிழில் பேச வேண்டும் என்று கூறிவிட்டு மொழி தெரியாத அனுயாவை அழைத்து வந்தனர். அவர் எதுவும் பேசாமல் ஓரமாக இருந்ததையடுத்து அவரை முதல் ஆளாக எலிமினேட் செய்து வீட்டிற்கு அனுப்பிவிட்டனர்.

பரபரப்பு

பரபரப்பு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்பொழுது பரபரப்பு குறைந்தாலும் ஜூலியை டார்கெட் செய்து கதறி அழவிடுகிறார்கள். சும்மா சும்மா ஜூலியையே அழவிட்டால் ஏற்கனவே கழுவிக் கழுவி ஊத்தும் நெட்டிசன்கள் மேலும் வறுத்தெடுக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டார்கள்.

பேக்கப்

பேக்கப்

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் நமீதா மற்றும் ஜூலி மீது தான் ரசிகர்களின் கவனம் உள்ளது. அதனால் முதல் நாள் நமீதாவை கோபித்துக் கொண்டு தன் வீட்டிற்கு கிளம்புவதாக பேச வைத்தனர்.

ஜூலி

ஜூலி

நமீதாவை அடுத்து ஜூலி கோபத்தில் அழுது கொண்டே நான் இப்பவே எங்க வீட்டுக்கு கிளம்புகிறேன் என்றார். அதன் பிறகு தற்போது பரணி என்னால் முடியலங்க என்று அழுகிறார்.

அரைச்ச மாவு

அரைச்ச மாவு

அரைச்ச மாவையே திரும்பத் திரும்ப அரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நெட்டிசன்கள் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டி மீம்ஸ் போடுகிறார்கள்.

English summary
Netizens are trolling Big Boss big time on social media. Viewers have got irritated with the repeated concenpts.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil