For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிக்பாஸ் 1ல் ஓவியா பாவம்... இந்த சீசன்ல ஆண்தான் ஜெயிப்பார் - கணித்த போஸ் வெங்கட்

|
Bigg boss-ல ஜெயிக்க போவது யாரு தெரியுமா? | Actor Boss Venket Exclusive : Part 2

சென்னை: பிக்பாஸ் 1ல் ஓவியா அழுதாலே நமக்கு பாவமா இருக்கும். ஆனா இப்ப இருக்குறவங்க கிட்ட உண்மை இல்லே. இப்போ நடந்துட்டு வர்ற பிக்பாஸ் நிகழ்ச்சியோட சீசன் 3ல நிச்சயமாக ஆம்பளைங்கதான் ஜெயிப்பாங்கன்னு நம்ம போஸ் வெங்கட் கருத்து சொல்லி இருக்காரு.

பிக் பாஸ் நிகழ்ச்சியோட சீசன் 3 பத்தி கன்னி மாடம் படத்தோட டைரக்டர் போஸ் வெங்கட் வெளிப்படையா கருத்து சொல்லியிருக்காரு. என்ன சொன்னாருன்னு பாக்கலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியை எல்லோரும் எந்த கண்ணோட்டத்தோடு பாக்குறாங்கன்னு தெரியலை. நான் பிக் பாஸுக்கு வீட்டுக்குள்ளாற போனால், நான் யாருன்னு முழுசா எல்லாருக்கும் தெரியும். நான் யாருன்னு மத்தவங்க தெரிஞ்சுக்கிறதுக்காக வேணும்னா நான் பிக் பாஸுக்கு போகலாம். நம்மள பத்தி எல்லாரும் தெரிஞ்சுக்கணுன்னு தான் பிக் பாஸ் நிகழ்ச்சியவே நடத்துறாங்க.

இதுக்கு மேல எனக்கு ஒண்ணுமில்லே, எனக்கு எதிர்காலமே இல்லைன்னா நிச்சயமா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகலாம். நான் அரசியல்ல பெரிய ஆளா வரணும்னு ஆசை. அரசியல்ல பெரிய பொறுப்புக்கு வரணும், நான் வளர்ந்த பகுதிக்கு பெருசா ஏதாவது செய்யணும்னு நான் ஆசைப்படுகிறேன்.

பிக்பாஸ்

பிக்பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில என்ன நடக்குதுன்னா அடுத்தவங்கள போட்டுக்கொடுத்து, பின்னாடி அவங்கள சேத்து வைக்கிறது தான். ரெண்டு பேரு பேசுற நெகட்டிவான விசயங்களை மட்டுமே காட்டுறாங்க. பாசிட்டிவா பேசுறத காட்டாம கட் பண்ணிடறாங்க.

மோதல்

மோதல்

நாட்டுல இப்ப அரசியல்வாதிங்க அதத்தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க. ரெண்டு கட்சிக்காரங்களையும் மோதவிட்டு பின்னாடி அவங்கள கஷ்டப்பட்டு சேத்துவைப்பாங்க. சப்போஸ் அவங்க ரெண்டு பேரும் சேராம போய்ட்டாங்கன்னா அப்போ பழி நம்ம மேல விழுந்துரும்.

ஜாலி சாண்டி

ஜாலி சாண்டி

இப்போ நடங்துக்கிட்டு இருக்குற பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3யில், போட்டியாளர்களில் சாண்டி எப்பவும் போல ஜாலியா இருக்கான். அவன் எப்பவுமே இப்படித்தான். அவனுக்கு வேற எதுவும் தெரியாது. சாண்டிக்கு கோல்மூட்டி விடுறதுக்கு தெரியாது. நம்மகிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போதே நம்மள பத்தி பக்கத்துல இருக்குறவங்க கிட்டே போட்டுக்கொடுத்துடுவான். இதத் தவிர அவனுக்கு ஒண்ணும் தெரியாது, பாவம் சின்னப் பையன். இதைத்தான் பிக் பாஸ் வீட்டுக்குள்ளேயும் பண்றான்.

சேரன்

சேரன்

சேரனைப் பத்தி எனக்கு பெர்சனலா நல்லா தெரியும். அவர் நிச்சயமா தாக்குபிடிப்பார். ஆனா சரவணன் அப்பிடி கிடையாது. அவருக்கு அவசரப்புத்தி, முன்கோபம் ஜாஸ்தி. அதனால தான் வெளியில வந்துட்டார். அதேபோல், மலேசியாவுல இருந்து வந்திருக்குற முகென். அவர் முகத்துல ஒரு ஒளிவட்டம் தெரியுது. நிச்சயமா அவர் சாதிப்பார்னு எனக்கு தோனுது.

மதுமிதா - ஓவியா

மதுமிதா - ஓவியா

லேடீஸ்ல மதுமிதா அப்பிடியே தான் இருக்காங்க. பெருசா யாரும் அட்ராக்ட் பண்ணலை. அதே மாதிரிதான் லஸ்லியா. வந்த புதுசுலெ எல்லாரும் ஆஹா ஓஹோன்னு சொன்னாங்க. ஆனா நம்ம ஒவியா இம்ப்ரஸ் பண்ணுன மாதிரி இவங்க இம்ப்ரஸ் பண்ணலை. ஓவியாவோட நடவடிக்கையில ஒரு உண்மை இருந்துச்சி. அவங்க அழுதாலே நமக்கு பாவமா இருக்கும். அவங்க நடவடிக்கைல ஒரு துளி கூட பொய் கெடையாது. அதே மாதிரி ஓவியா பந்தாவா காட்டிக்கணும்னு நெனைக்கவே இல்லை.

ஜெயிப்பது யார்

ஜெயிப்பது யார்

நான் இப்பிடித்தான் இருப்பேன். புடிச்சா வச்சிக்கோ, இல்லாங்காட்டி எனக்கொண்ணும் கவலை இல்லன்னு சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க. அப்பிடி இருக்குறவங்க மேல தான் பெரிய மரியாதையே வரும். அந்த ரியாலிட்டி இந்த சீசன்ல இருக்குறவங்க கிட்ட கிடையாது. எனக்கு தெரிஞ்சவரை பிக் பாஸ் சீகன் 3யில நிச்சயமா பாய்ஸ்தான் வின் பண்ணுவாங்கன்னு தோணுதுன்னு சொல்லி நம்ம போஸ் வெங்கட் முடித்துக்கொண்டார்.

English summary
No female contestants were attracted to the Bigg Boss season 3. So this time the male competitor will win the Title, said Bose Venkat.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more