பேய்க்கதை சொல்லும் ராஜு… அலறி கத்திய தாமரை செல்வி… பிக் பாஸ் ப்ரோமோ !
சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5வது சீசன் நேற்று மிகவும் பிரம்மாண்டமான முறையில் தொடங்கியது. இதில் ஒவ்வொரு போட்டியாளரையும் கமல் அறிமுகம் செய்து வைத்தார்.
கானா பாடகி, நாட்டுப்புற பாடகர்கள், நடிகர்கள், நடிகைகள், தொகுப்பாளர் என பல துறைகளை சேர்ந்த 18 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
வழக்கமாக 16 போட்டியாளர்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் இந்த முறை 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முதல் ப்ரோமோ
இந்த நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ காலையில் வெளியானது. இதில் வீட்டின் தலைவரை தேர்வு செய்யும் நிகழ்வு நடக்கிறது. இதற்காக நிரூப், பவ்னி, சின்ன பொண்ணு, ராஜு உள்ளிட்ட 5 பேர் முன் வருகிறார்கள். இவர்களில் ராஜு, பாத்ரூம் கழுவும் டீமுக்கு தலைவராக இருப்பதாக கூறுகிறார். இதனால் அனைவரும் அவரை கலாய்க்கின்றனர்.

பிக் பாஸ் விதி
இதையடுத்து வெளியான 2வது ப்ரோமோவில், பிக்பாஸ் விதிகளை வீட்டில் இருப்பவர்களுக்கு ராஜு படித்துக்காட்டுகிறார். இதில், கேமிராக்களில் பதிவாகும் காட்சிகள் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் என்றும், குளியல் அறை மற்றும் கழிவறையில் கேமிரா பொருத்தப்படவில்லை. வீட்டின் சாதனங்களை சேதப்படுத்தக்கூடாது என்று ஒவ்வொரு விதியையும் ராஜுபடித்துக் காட்டுகிறார்.

3வது ப்ரோமோ
தற்போது வெளியாகி உள்ள 3வது ப்ரோமோவில், ஒரு கதை சொல்லு ராம் என்று குரல் மட்டும் வருகிறது இதில் ராஜு கதை சொல்கிறார் , ஊர் பஞ்சாயத்து தலைவர் வீட்டுக் கதவைத் தட்டி, எங்க அம்மா கையில ஒரு மோதிரம் இருந்துச்சே அது எங்கேனு கேட்டேன் என்கிறார். இதற்கு அம்மா செத்தது பற்றி எல்லாம் கவலை இல்லையா என்று தாமரை செல்வி கிண்டலாக கேட்கிறார்.

அலறி கத்தும் தாமரை செல்வி
அதைத்தொடர்ந்து பேசிய ராஜு , அந்த கை விரலை அப்படி இப்படி ஆட்டி கை விரலை ஒடச்சி, அந்த மோதிரத்தை எடுத்துட்டு புதைச்சிட்டு போய்டுறாங்க... அந்த பாட்டிக்கிட்ட என்ன பாட்டி விரலைக் காணும்னு கேட்க... நீ தானே ஒடச்சே என்று பயமுறுத்தும் வகையில் ராஜு சொல்ல அப்படியே தாமரை செல்வி அலறி கத்துகிறார்.

ராஜு செம ஜாலியான ஆளு போல
ராஜு சொல்வதை கேட்டுக்கொண்டு இருந்த நடிகர் வருண், ராப் பாடகி ஐக்கி பெரி, மாடல் அழகி அக்ஷரா ஷெட்டி ஆகியோர் பயங்கரமாக சிரித்துள்ளனர். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு நிச்சயமா என்டர்டைன்மென்ட் இருக்கும் என்றும், இன்னைக்கு வெளியான 3 ப்ரோமோவிலும் ராஜு தான் கலக்குறாரு என்றும், ராஜு செம ஜாலியான ஆளு போல என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











