அடுத்த வருஷம் தலை தீபாவளி கொண்டாடனும்.. அமீர் -பாவ்னிக்கு குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : டான்ஸ் மாஸ்டர் அமீர் மற்றும் நடிகை பாவ்னி இருவரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இடையில் நுழைந்த அமீர், பாவ்னியிடம் தன்னுடைய காதலை தெரிவித்த நிலையில் அதை அவர் ஏற்காமல் இருந்தார்.

தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் அமீரின் காதலை அவர் ஏற்றுக் கொண்டார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 5 சீசன்களை போலவே இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி அதிகமான ரசிகர்களை கவர காரணமான பிரபல யூடியூபர் ஜிபி முத்து நிகழ்ச்சியின் இடையிலேயே விலகியுள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த அமீர் -பாவ்னி

ரசிகர்களை கவர்ந்த அமீர் -பாவ்னி

கடந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் ராஜு டைட்டிலை வென்ற நிலையில், நிகழ்ச்சியின் ஹைலைட்டாக காணப்பட்டது அமீர் -பாவ்னி ஜோடியின் காதல். நிகழ்ச்சியின் இடையில் நுழைந்த டான்ஸ் மாஸ்டர் அமீர், பாவ்னியிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார். ஆனால் தன்னுடைய முதல் வாழ்க்கையை மறக்க முடியாத பாவ்னி, அவரது காதலை ஏற்கவில்லை.

காதலை ஏற்காத பாவ்னி

காதலை ஏற்காத பாவ்னி

ஆனாலும் தன்னுடைய காதலை தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில், பலவிதங்களில் அமீர் வெளிப்படுத்தினார். ஆனால் தொடர்ந்து அவரது காதலை பாவ்னி நிராகரித்த நிலையில், நிகழ்ச்சியை விட்டு வெளியில் சென்றாலும் இவர்களது நட்பு தொடர்ந்து. அது நட்பா இல்லை காதலா என்று ரசிகர்களையும் குழப்பியது.

அமீரை ஏற்ற பாவ்னி

அமீரை ஏற்ற பாவ்னி

இதையடுத்து பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் இந்த ஜோடி பங்கேற்று டைட்டிலை வென்றது. இதையடுத்து அமீரின் காதலை பாவ்னி நிகழ்ச்சியிலேயே ஏற்றுக் கொண்டார். விரைவில் இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று ரசிகர்களை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி கொண்டாட்டம்

முன்னதாக இவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்ட மியூசிக் ஆல்பம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே, தீபாவளியையொட்டி, அமீர் -பாவ்னி இருவரும் இணைந்து போட்டோஷுட் ஒன்றையும் எடுத்துள்ளனர். இதை அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டுள்ள நிலையில், அவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஏராளமான லைக்ஸ்களை பெற்றுள்ளன.

ரசிகர்கள் கோரிக்கை

ரசிகர்கள் கோரிக்கை

இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ள நிலையில், விரைவில் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் அடுத்த ஆண்டில் இருவரும் இணைந்து தலை தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X