நடந்திருந்தா நல்லாதான் இருந்திருக்கும்.. எதப்பத்தி பேசியிருக்காரு பிக்பாஸ் ராஜூ?

சென்னை : விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியாக காணப்படும் பிக்பாஸ் சீசன் 5 தற்போது 5 சீசன்களை கடந்துள்ளது.

விரைவில் இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் துவங்கப்பட உள்ளது. இதிலும் நடிகர் கமல்ஹாசனே தொகுப்பாளராக விளங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிக் பாஸ் 5வது சீசனின் டைட்டில் வின்னர் ராஜூ அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி

விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியாக பிக்பாஸ் இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து தொகுத்து வழங்கினார். இதையடுத்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிய அவர், அதிலிருந்து இடையிலேயே விலகினார். இதையடுத்து இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார்.

விரைவில் பிக்பாஸ் சீசன் 6

விரைவில் பிக்பாஸ் சீசன் 6

இந்நிலையில் விரைவில் பிக் பாஸ் சீசன் 6 துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை கமல் அல்லது சிம்பு யார் தொகுத்து வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

டைட்டில் வின்னர் ராஜூ

டைட்டில் வின்னர் ராஜூ

கடந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ராஜூ, சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கேரக்டர் அவருக்கு சிறப்பான ஓபனிங்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆனாலும் அவரை நல்ல கேரக்டர்களில் பார்க்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சினிமாவில் கவனம்

சினிமாவில் கவனம்

பிக்பாஸ் 5வது சீசனில் வெற்றி பெற்றவுடன் அவர் நடித்துக் கொண்டிருந்த சில சீரியல்களை கைவிட்டு தற்போது சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியையும் பிரியங்காவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

 சர்தார் படத்தில் ராஜூ?

சர்தார் படத்தில் ராஜூ?

இந்நிலையில் அடுத்ததாக கார்த்தி நடிப்பில் வரும் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ள சர்தார் படத்தில் ராஜூ முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளதாக கடந்த சில தினங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகின. இதனால் ராஜூ ரசிகர்கள் உற்சாகமடைந்த நிலையில் இதுகுறித்து தற்போது ராஜூ தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

ராஜூ விளக்கம்

ராஜூ விளக்கம்

இந்த விஷயத்தில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விஷயம் கேட்கவும் பார்க்கவும் நன்றாகத்தான் உள்ளது என்றும் அவர் தன்னுடைய பாணியில் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் சர்தார் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார்.

Recommended Video

Abhishek இயக்கப்போகும் சர்ச்சைக்குரிய படம் | Filmibeat Tamil
கார்த்தி நடிப்பில் சர்தார்

கார்த்தி நடிப்பில் சர்தார்

கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கியுள்ள படம் சர்தார். ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் கார்த்தி நடித்துள்ளார். மேலும் ராஷி கண்ணா, லைலா, ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X