இன்னைக்குதான் உருப்படியா பேசற மேன்.. அமுதவாணனுக்கு பாராட்டு தெரிவித்த ரசிகர்கள்!
சென்னை :பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றைய தினம் 18வது நாளை எட்டியுள்ளது. கடந்த இரு வாரங்களை சிறப்பாக முடித்து 3வது வாரத்தில் நடைபோட்டு வருகிறது.
நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அனுசரணையாக நடந்துக் கொள்ளும் அதேவேளையில் போட்டியென்று வந்துவிட்டால் எதையும் விட்டுக் கொடுக்காத மனநிலையில் செயல்பட்டு வருகின்றனர்.
நிகழ்ச்சியின் அடுத்தடுத்த டாஸ்க்குகளும் அதில் சிறப்பாக செயல்படும் போட்டியாளர்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 9ம் தேதி பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கப்பட்டு தற்போது 3வது வாரத்தில் நடைபோட்டு வருகிறது. நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு அதிகமாக பரிட்சயமில்லாதவர்களாக இருந்தாலும் ஒருசிலரை தவிர மற்ற போட்டியாளர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர்.

சுவாரஸ்யமாக்கும் முயற்சி
முதல் போட்டியாளராக களமிறங்கிய ஜிபி நிகழ்ச்சியின் பைனலிஸ்டாக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து அவரது இடத்தை நிரப்ப மற்ற போட்டியாளர்கள் மெனக்கெட்டு வருகின்றனர். நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க அவர்கள் அதிகமான செயல்பாட்டை காட்டி வருகின்றனர்.

பொம்மை டாஸ்க்
அடுத்தடுத்த டாஸ்க்குகளை போட்டியாளர்கள் எதிர்கொண்டு வரும் நிலையில், தற்போது டால் டாஸ்கில் ஈடுபட்டுள்ளனர். இந்த டாஸ்கில் பொம்மைகளுக்காக போட்டியாளர்கள் அடித்துக் கொள்வது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இடையிடையே அவர்களின் வாக்குவாதங்களையும் போட்டிகளையும் சண்டைகளையும் பார்க்க முடிகிறது.

அசீமிற்கு ரெட் கார்ட்?
இந்த டாஸ்கின் போது ஒருவரையொருவர் தள்ளி விட்டதும் நடந்தது. தனலட்சுமியின் நெஞ்சில் கைவைத்து அசீம் தள்ளியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதை தான் சும்மா விடப் போவதில்லை என்று தனலட்சுமி தெரிவித்துள்ளார். அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கும்படி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

அசீமிடம் கோபப்பட்ட அமுதவாணன்
இதனிடையே, அவரது இந்த செயல்பாட்டிற்கு அமுதவாணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது. தற்போதுதான் அவர் சரியாக பேசியுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அமுதவாணன் நெருப்பாகவும் மாஸாகவும் செயல்பட்டதாகவும் கமெண்ட் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் பாராட்டு
மேலும் தனலட்சுமிக்கு ஆதரவாக அசீமை எதிர்த்து அவர் பேசிய விதம் சிறப்பாக அமைந்ததாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர். அசீம் தனது மோசமான செயல்பாடுகளால் ரசிகர்களை தொடர்ந்து வெறுப்பேற்றி வருகிறார். இதனால்தான் அவரை திட்டிய அமுதவாணன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அசீமின் குரங்குவித்தை
மேலும் அசீம் குரங்குவித்தை காட்டுவதாகவும் கூவி கூவி விற்கத்தான் அவர் சரிப்படுவார் என்றும் ரசிகர் ஒருவர் கமெண்ட் தெரிவித்துள்ளார். அதிகமாக செயல்படாமல் இருந்த அமுதவாணன், கடந்த வாரத்தில் இருந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதனிடையே தனலட்சுமிக்கு ஆதரவான அவரது செயல்பாடு ரசிகர்களை கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











