சன்னி லியோனுடன் நடித்துள்ள ஜிபி முத்து.. பாராட்டு பத்திரம் வாசித்த இயக்குநர்!

சென்னை : டைரக்டர் யுவன் இயக்கத்தில் சன்னி லியோன் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ஓ மை கோஸ்ட்.

இந்தப் படத்தில் பிக்பாஸ் போட்டியாளர் ஜிபி முத்து முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் சன்னி லியோன் ராணியாக நடித்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமாக படம் உருவாகியுள்ளது.

ஓ மை கோஸ்ட் படத்தில் ஜிபி முத்து

ஓ மை கோஸ்ட் படத்தில் ஜிபி முத்து

சிந்தனை செய் என்ற படத்தினை இயக்கி நடித்திருந்த யுவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஓ மை கோஸ்ட். மிகுந்த பிரம்மாணடமாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் லீட் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார். படத்தில் இவர் ராணியாக நடித்துள்ளார்.

வரலாற்று பின்னணியில் உருவான படம்

வரலாற்று பின்னணியில் உருவான படம்

மிகுந்த பொருட்செலவில் வரலாற்று பின்னணியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் சதீஷ், யோகிபாபு ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில், ரமேஷ் திலக், ரவி மரியா மற்றும் முக்கியமான கேரக்டரில் தர்ஷா குப்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

சன்னி லியோனுடன் நடித்துள்ள ஜிபி முத்து

சன்னி லியோனுடன் நடித்துள்ள ஜிபி முத்து

இவர்களுடன் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்று அனைவரையும் கவர்ந்துவரும் பிரபல யூடியூபர் ஜிபி முத்துவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ஜபி முத்துவை தேர்ந்தெடுக்க தயக்கம்

ஜபி முத்துவை தேர்ந்தெடுக்க தயக்கம்

இந்தப் படத்தில் தனக்கு முதலில் அதிகமாக பரிட்சயமில்லாத ஜிபி முத்துவை தன்னுடைய டீம்தான் தனக்கு அறிமுகப்படுத்தியதாகவும் இவர் எப்படி நடிப்பார் என்று ஆரம்பத்தில் தனக்கு தயக்கம் இருந்ததாகவும் படத்தின் இயக்குநர் யுவன் தெரிவித்துள்ளார். ஆனால் தான் எதிர்பார்த்ததை காட்டிலும் உடனடியாக கேரக்டரை ஜிபி முத்து உள்வாங்கி நடித்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

சிறப்பான நடிகர்

சிறப்பான நடிகர்

அவருக்குள் ஒளிந்திருக்கும் நடிகர் இந்தப் படத்தில் கண்டிப்பாக வெளிப்படும் என்றும் யுவன் கூறியுள்ளார். அவர் பெரிய காமெடியனாக வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாகவும குறிப்பிட்டுள்ளார். படத்தில் நாட்டு வைத்தியராக நடித்துள்ள ஜிபி முத்துவை காட்டிலும் அந்தக் கேரக்டருக்கு வேறு யாரும் சிறப்பாக பொருந்திவிட முடியாது என்றும் கூறியுள்ளார்.

ரசிகர்கள் கொண்டாடுவார்கள்

ரசிகர்கள் கொண்டாடுவார்கள்

இந்தப் படத்தில் அவரது நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்றும் யுவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதேபோல இந்தப் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ள சன்னி லியோனை வைத்து தான் இந்தக் கதையையே உருவாக்கியதாகவும் கதையை கேட்டவுடன் இம்ப்ரஸ் ஆகி அவர் உடனடியாக ஓகே சொல்லியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வித்தியாசமான வரலாற்று கதை

வித்தியாசமான வரலாற்று கதை

வரலாற்றுக் கதையாக இருந்தாலும் இந்தப் படத்தில் ரோம், இத்தாலி ஸ்டைலில் கதைக்களம் இருப்பதால் வித்தியாசமான லுக்கிற்கு சன்னி லியோன் பொருத்தமாக இருப்பார் என்று தன்னுடைய படக்குழு முதலிலேயே தீர்மானித்து, கஷ்டப்பட்டு இந்தக் கதையில் சன்னி லியோனை கொண்டு வந்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X