ஜனனிக்கு ரெண்டு ஃபிளாக்.. கிரீனைக் கொடுத்து பிடுங்கிக் கொண்ட ஜிபி முத்து!
சென்னை : நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய தினம் 7வது நாளை எட்டியுள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூழலில், தற்போதைய சீசனில் 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
போட்டியாளர்களின் மனநிலையை எடைபோடும் வகையில் நேற்றும் இன்றும் நிகழ்ச்சியின் ஆங்கர் கமல்ஹாசன் கலகலப்பான உரையாடல்களை மேற்கொண்டு வருகிறார்.

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் ஷங்கர் இயக்கத்தில் இணைந்துள்ளார். தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் முதல் கட்ட சூட்டிங் நடைபெற்று வந்தது.

பிக்பாஸ் போட்டியில் ஆங்கரிங்
இதனிடையே இந்தப் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் ஒரு மாத காலம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கவனம் செலுத்தவுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை துவங்கிய இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்து 20 போட்டியாளர்களையும் சிறப்பாக அறிமுகம் செய்துவைத்து பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார் கமல்ஹாசன்.

7வது நாளில் பிக்பாஸ் நிகழ்ச்சி
இதனிடையே இந்த நிகழ்ச்சி துவங்கி இன்றைய தினம் 7வது நாளை எட்டியுள்ளது. வாரயிறுதி நாளான நேற்றும் இன்றும் பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், அவர்களுடன் கலகலப்பான உரையாடலை மேற்கொண்டுள்ளார். இன்றைய தினமும் இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

ஜனனிக்கு ஜிபி முத்து பச்சைக் கொடி
இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக நான்கு குழுக்களாக பிரிந்து செயல்பட்டுவரும் போட்டியாளர்கள் சிறப்பான தலைவர்களின் செயல்பாட்டிற்கு பச்சை நிற ஃபிளாக் கொடுத்தனர். இதேபோல அவர்களின் தவறான செயல்பாட்டிற்கு சிவப்பு நிற ஃபிளாக் வழங்கப்பட்டது. இதையொட்டி தன்னுடைய குழுவின் தலைவர் ஜனனிக்கு முதலில் பச்சை நிற கொடியை வழங்கினார் ஜிபி முத்து.

ஜனனிக்கு சிவப்புக் கொடி
டீமில் பொறுமையாக எந்த பிரச்சினை வந்தாலும் அதை சிறப்பாக கையாண்ட ஜனனிக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் முதலில் பச்சை நிற கொடியை கொடுத்தார் ஜிபி முத்து. ஆனால் உடனடியாக அதை ஜனனியிடம் இருந்து பிடுங்கிக் கொண்டு, அடுத்ததாக சிவப்பு நிறக் கொடியை கொடுத்தார்.

ஜிபி முத்துவை கண்டித்த ஜனனி
தான் தன்னுடைய டீமின் டாஸ்கை சிறப்பாக ஒரு குறையும் இல்லாமல் முடித்துக் கொடுத்துவிட்டு, சாந்தி அக்கா ஒத்தையில் சமையலில் கஷ்டப்படுகிறாரே என்று அவருக்கு உதவி செய்ய, அதை ஜனனி கண்டித்ததாகவும் இந்த இடத்தில் மனிதாபிமானத்திற்கு இடமில்லை, டீமிற்குதான் முதலிடம் என்று தன்னிடம் கூறியதாகவும் அதனால் அவருக்கு சிவப்பு கொடி என்றும் ஜிபி முத்து தெரிவித்தார்.

பாராட்டு + கண்டனம்
ஒரே நேரத்தில் தன்னுடைய டீமின் தலைவர் ஜனனிக்கு பச்சைக் கொடியையும் தொடர்ந்து சிவப்பு கொடியையும் கொடுத்த ஜிபி முத்துவின் இந்த செயல்பாட்டிற்கு அவரது ஆர்மியில் வரவேற்பு காணப்பட்டது. அவர் இந்த விஷயங்களை அழுத்தமாக பதிவு செய்ததையும் அவரது ரசிகர்கள் வரவேற்றனர்.


Click it and Unblock the Notifications











