பாத்ரூமில் டான்ஸ் பிராக்டீஸ் செய்த ஜிபி முத்து.. இதுதான் சூப்பர் டான்சுக்கு காரணமா!

சென்னை : பிக்பாஸ் சீசன் 6 முதல் வாரத்தை கடந்து இரண்டாவது வாரத்திலும் சிறப்பான பல டாஸ்க்குகளுடன் ரசிகர்களை சந்தித்து வருகிறது.

முதல் கேப்டனுக்கான இந்த டாஸ்க்கில் ஏறக்குறைய இரண்டு மணிநேரங்களில் பிரம்மாண்டமான கடிகாரத்தில் தொங்கியபடி இருந்து வெற்றி பெற்றார் ஜிபி முத்து.

தொடர்ந்து டான்ஸ் டாஸ்கில் ஏடிகேவுடன் போட்டி போட்டு அவரை வீழ்த்தி அதிலும் வெற்றி பெற்று தன்னுடைய ஆர்மியினரை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 6 போட்டி

பிக்பாஸ் சீசன் 6 போட்டி

கடந்த 9ம் தேதி மிகப்பெரிய பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 போட்டி தற்போது இரண்டாவது வாரத்திலும் பரபரப்பான பல டாஸ்க்குகளுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. போட்டியாளர்கள் அனைவரும் இவற்றை மிகவும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.

கேப்டன் டாஸ்கில் வெற்றி

கேப்டன் டாஸ்கில் வெற்றி

நேற்றைய தினம் முதல் கேப்டனுக்கான போட்டியில் சாந்தி, ஜனனி உள்ளிட்டவர்களுடன் மோதினார் ஜிபி முத்து. கடிகாரம் போன்ற செட்டப்பில் அதிக நேரம் யார் தாக்கு பிடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர் என்ற விதியுடன் இவர்கள் மூவரும் கடிகாரத்தில் தொங்கிக் கொண்டிருந்தனர். இந்த டாஸ்க் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

முதல் கேப்டன் ஜிபி முத்து

முதல் கேப்டன் ஜிபி முத்து

இதையடுத்து பாதியிலேயே சாந்தி தலைதெறிக்க ஓடிவிட்டார். தொடர்ந்து ஜிபி முத்துவிற்கு டப் கொடுத்து ஜனனி தாக்கு பிடித்தார். ஆனால் அவரால் ஒரு கட்டத்தில் இதை தொடர முடியாமல் அவரும் பின்வாங்கினார். இதையடுத்து ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக மாறியுள்ளார்.

டான்ஸ் டாஸ்கில் அதிரடி

டான்ஸ் டாஸ்கில் அதிரடி


இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்கும் வகையில் டான்ஸ் டாஸ்க்கும் வைக்கப்பட்டது. இதன்படி நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் இருவர் ஒரே மேடையில் நடனமாடி சக போட்டியாளர்களை கவர வேண்டும் என்ற விதியுடன் ஏடிகேவுடன் களமிறங்கிய ஜிபி முத்து அதிரடியாக ஆடி அனைவரையும் கவர்ந்தார். ரசிகர்களையும் சேர்த்துதான்.

பாத்ரூமில் பிராக்டீஸ்

பாத்ரூமில் பிராக்டீஸ்

இலங்கையை சேர்ந்த ராப் பாடகரான ஏடிகேவையே ஜிபி முத்து இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடி வீழ்த்தினார். முன்னதாக பாத்ரூமில் ஏடிகேவுடன் இணைந்து ஜிபி முத்து டான்ஸ் பிராக்டீசில் ஈடுபட்டார். அதில் ஏடிகே தான் ஜிபி முத்துவிற்கு இப்படி ஆடலாம் என்று பிராக்டீஸ் கொடுத்துள்ளார். ஆனால் அவர் வெற்றியை கோட்டை விட்டு விட்டார்.

அதிரடி சரவெடி நடனம்

அதிரடி சரவெடி நடனம்

ஒன்றுமே தெரியாதவர் போல இந்த பயிற்சியில் ஜிபி முத்து காணப்படுகிறார். எல்லாம் தெரிந்தவர்போல அவருக்கு சொல்லிக் கொடுக்கிறார் ஏடிகே. ஆனால் மேடை ஏறியதுதான் தாமதம். தன்னுடைய ஒரிஜினல் முகத்தை காட்டத் துவங்கினார் ஜிபி முத்து. அதிரடி சரவெடியாக அவரது நடனம் அனைவரையும் கவர்ந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X