கல்யாணம் குறித்த பிக்பாஸ் ஜனனியின் வேற லெவல் திட்டம்.. என்ன சொன்னாங்க தெரியுமா?
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்து வருகிறார் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் ஜனனி.
நிகழ்ச்சியில் தனலட்சுமிக்கு அட்வைஸ் செய்யும் வகையில் இவர் பேசிய பேச்சு அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதனிடையே இவரது திருமண திட்டமும் வேறு லெவலில் உள்ளது. சக போட்டியாளர்களிடம் இவர் இதுகுறித்து பேசியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் க்யூட் வரவாக காணப்படுகிறார் இலங்கையை சேர்ந்த ஜனனி. இவரது பேச்சு அனைவரையும் கவர்ந்து வருகிறது. இவர் மாடலிங், செய்தி வாசிப்பு மற்றும் ஆங்கரிங் செய்து வந்த நிலையில், இவருக்கு இன்ஸ்டாகிராமில் அதிகமான பாலோயர்ஸ் இருந்த நிலையில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இணைந்துள்ளார்.

ஜனனியின் தெளிவான பேச்சு
பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்துவிற்கு எதிராக தனலட்சுமி தொடர்ந்து சண்டையிட்ட நிலையில், அவருக்கு அவரது தவறான செயல்பாட்டை சுட்டிக் காட்டி ரசிகர்களை குறிப்பாக ஜிபி முத்து ஆர்மியை வசம் செய்துள்ளார் ஜனனி. பெரியவர்கள் பேச்சை கேட்டு நடக்க வேண்டும் என்று தெளிவாக பேசினார் இந்த 21 வயது தேவதை.

ஜனனிக்கும் ஆர்மி
ஜிபி முத்துவிடம் சகோதரப் பாசத்துடன் பழகும் ஜனனியை ரசிகர்கள் தேவதை என்றுத்தான் சொல்கிறார்கள். ஜிபி முத்துவை போலவே ஜனனிக்கும் ஆர்மியை துவங்கி இவரது க்யூட் புகைப்படங்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இளம் வயதாக இருந்தாலும் இவரது தெளிவான செயல்பாடுகள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

அழகாக மாறிவிடுவேன்
இதனிடையே இவர் சக போட்டியாளர்கள் ராபர்ட் உள்ளிட்டவர்கள் பேசிக் கொண்டிருந்த நிலையில், அவர் இன்னும் கொஞ்சம் சதை போட்டால் அழகாக இருப்பார் என்று கூறுகின்றனர். அதற்கு பதிலளித்த ஜனனி, தற்போதுதான் 21 வயதாவதாகவும் 25 வயதிற்குள் மிகவும் அழகாக மாறிவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

26 வயதில் திருமணம்
தொடர்ந்து 26 வயதில் தான் திருமணம் செய்துக் கொள்வேன் என்றும் 30 வயதில் தன்னுடைய குழந்தைகளின் நண்பர்கள், உன்னுடைய அம்மா ச்சோ ஸ்வீட் என்று கூறுமளவிற்கு மாறிவிடுவேன் என்று அவர் தன்னுடைய குழந்தைத்தனம் மாறாமல் பேசியுள்ளது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

த்ரிஷாவின் போட்டி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் துவக்க நாளில் கமலிடம் பேசிய ஜனனி, தனக்கு சிறு வயதிலேயே த்ரிஷாவை மிகவும் பிடிக்கும் என்றும் அவரைப் போலவே தான் ஆக வேண்டும் என்று நினைத்ததாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து த்ரிஷாவிற்கு போட்டி வந்துவிட்டதாக கமலும் கூறினார்.


Click it and Unblock the Notifications











