வெங்காயம் சாப்பிடும் சேலஞ்ச்.. இன்னா வெட்டு வெட்டறாரு மணிகண்டன்!
சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அடுத்தடுத்த சேலஞ்சுகளை போட்டியாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
தினந்தோறும் வித்தியாசமான மற்றும் ரசிகர்களை கவரும்வகையில் போட்டிகளை தொடர்ந்து போட்டியாளர்கள் செய்து வருகின்றன.
இந்நிலையில் இன்றைய தினம் மணிகண்டன் மேற்கொண்ட சேலஞ்ச் அனைவரையும் கவர்ந்தது. இதன்மூலம் அவர் பாயிண்ட்களையும் பெற்றுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இப்போதுதான் துவங்கியது போல இருக்கிறது. அதற்குள் 3வது வாரத்தில் நிகழ்ச்சி நடைபோட்டு வருகிறது. இன்றைய தினம் 17வது நாளை நிகழ்ச்சி வெற்றிகரமாக எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி அடுத்தடுத்த டாஸ்க்குகளை போட்டியாளர்களுக்கு தொடர்ந்து கொடுத்து வருகிறது.

அடுத்தடுத்த டாஸ்க்குகள்
இந்த டாஸ்க்குகள் மூலம் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் எலிமினேஷன் ரவுண்டில் சாந்தி வெளியேற்றப்பட்டார். இதையடுத்து நிகழ்ச்சியின் ஜிபி முத்துவும் வெளியேறினார். இந்த வாரமும் எலிமினேஷன் உள்ள நிலையில், டாஸ்க்குகளில் பங்கேற்று புள்ளிகளை பெறும் போட்டியாளர்கள் இதிலிருந்து தப்பிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

வெங்காயம் சாப்பிடும் சேலஞ்ச்
இதையடுத்து இத்தகைய டாஸ்க்குகளை எதிர்கொண்டு அதில் வெற்றி பெற ஒவ்வொரு போட்டியாளரும் முந்தியடிக்கின்றனர். இன்றைய தினம் வெங்காயம் சாப்பிடும் சேலஞ்சை ஏற்ற மணிகண்டன், அதை வெற்றிகரமாக முடித்து 200 லக்சுரி மதிப்பெண்களை அவர் பெற்றுள்ளார்.

பிக்பாஸ் பாராட்டு
இதையடுத்து அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்த பிக்பாஸ், வெங்காயத்தை இவ்வளவு ரசித்து சாப்பிட்ட நபரை தான் இப்போதுதான் பார்த்ததாகவும் தெரிவித்தார். ஆனால் வெங்காயத்தை சாப்பிட்டுவிட்டு குட்டிப் போட்ட பூனையாக மணிகண்டன் நடந்ததை சக போட்டியாளர்களும் ரசிகர்களும் பார்க்க முடிந்தது.

வெளியேறிய ஜிபி முத்து
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 21 போட்டியாளர்களில் இருவர் வெளியேறிய நிலையில், 19 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. மிகவும் எதிர்பார்ப்பிற்குள்ளான ஜிபி முத்து வெளியேறிய நிலையில், அவருக்கு பதிலாக யார் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











