சொர்க்கம் என்பது நமக்கு.. அடிதடிக்கு முன்னாடி பிக்பாஸ் வீட்டுல என்னா குத்தாட்டம் பாருங்க!

சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் புதுப்புது அனுபவங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.

இன்றைய தினம் அசீம் மற்றும் ஆயிஷாவிற்கு இடையில் சண்டை மூண்டது.

அதோடு நிகழ்ச்சியின் முக்கியமான கட்டமாக ராம் மற்றும் ஜனனி இருவரும் பிக்பாஸ் உத்தரவுக்கு இணங்க சிறையில் அடைக்கப்பட்டனர்.

பிக்பாஸ் வீட்டில் குறையாத உற்சாகம்

பிக்பாஸ் வீட்டில் குறையாத உற்சாகம்

பிக்பாஸ் வீட்டில் அடிதடிக்கு மட்டுமில்லாமல் உற்சாகத்திற்கும் குறைவில்லாமல்தான் உள்ளது. கடந்த 9ம் தேதி பிரம்மாண்டமாக துவங்கிய இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், முதல் நாளிலேயே எங்க ஏரியா உள்ள வராதே என்று குத்தாட்டத்துடன்தான் நிகழ்ச்சியை போட்டியாளர்கள் துவங்கினர்.

ஒற்றுமையை நிரூபித்த போட்டியாளர்கள்

ஒற்றுமையை நிரூபித்த போட்டியாளர்கள்

தொடர்ந்து 4 குழுக்களாக பிரிந்து செயல்பட்டாலும் ஜிபி முத்துவை கலாய்ப்பது, அவரிடம் கதை கேட்பது, மற்றவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து பேசுவது என ஹவுஸ்மேட்ஸ் மிகச்சிறப்பாகத்தான் நிகழ்ச்சியை தொடர்ந்து வருகின்றனர். இதனிடையே அடுத்தடுத்த கட்டங்களில் சண்டைகள் மூண்டாதும் தொடர்ந்து அடுத்தடுத்த டாஸ்க்குகளில் தங்களது ஒற்றுமையை நிரூபித்தனர்.

அடுத்தடுத்த சண்டைகள்

அடுத்தடுத்த சண்டைகள்

முதல் வாரத்தில் ஜிபி முத்துவுடன் சண்டையிட்ட தனலட்சுமி கூட இந்த வாரத்தில் அவரிடம் சகஜமாக இருந்ததை பார்க்க முடிந்தது. இதனிடையே இன்றைய தினமும் அடுத்தடுத்த சண்டைகள் அரங்கேறி வருகின்றன. ஆயிஷாவை வாடி, போடி என பேசியதாக அவர் அசீமிடம் சண்டையிட்டார்.

பிக்பாசிடம் முறையிட்ட தனலட்சுமி

பிக்பாசிடம் முறையிட்ட தனலட்சுமி

இதேபோல தன்னிடம் மோசமாக நடந்துக் கொண்டதாகவும் பாடி ஷேம் செய்ததாகவும் தனலட்சுமி அசலிடம் சண்டையிட்ட நிகழ்வும் நடைபெற்றது. இதையடுத்து தான் போட்டியிலிருந்து விலக விரும்புவதாக அவர் பிக்பாசிடம் வீடியோமூலம் தெரிவித்திருந்தார். ஒருபுறம் ஜிபி முத்து தன்னுடைய குடும்பத்தை பார்க்காமல் அவரும் வீடு திரும்ப விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ஆட்டம் போட்ட போட்டியாளர்கள்

ஆட்டம் போட்ட போட்டியாளர்கள்

ஆனாலும் போட்டியாளர்கள் தொடர்ந்து சக ஹவுஸ்மேட்களிடம் மிகவும் இயல்பாக, உற்சாகமாக ஒருவரை ஒருவர் கலாய்த்துக் கொண்டு இருந்ததையும் கோபமாக பேசியவர்களை சமாதானப்படுத்தியதையும் நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. இந்நிலையில் இன்றைய தினமும் சுத்தம் என்பது நமக்கு பாடலுக்கு அனைவரும் இணைந்து ஆட்டம் போட்டனர்.

துடைப்பத்துடன் சுற்றிவந்த கேப்டன்

துடைப்பத்துடன் சுற்றிவந்த கேப்டன்

ஜிபி முத்து மட்டும் கையில் துடைப்பத்தை வைத்துக் கொண்டு சுற்றி சுற்றி வந்தார். அவரையும் ஆட்டத்தில் ஈடுபடுத்த சில போட்டியாளர்கள் முயன்றனர். ஆனாலும் அவர் சுத்தம் செய்யாமல் ஆட்டம் போடும் போட்டியாளர்களை நோக்கி என்னப்பா இது என்ற ரீதியில்தான் கேள்வி எழுப்பினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X