பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இவங்கதானா.. வெளியான லிஸ்ட்!

சென்னை : விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 வரும் அக்டோபர் 9ம் தேதி துவங்கவுள்ளது.

துவக்கவிழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த விஜய் டிவி முடிவெடுத்துள்ளது. அதன் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

இதில் பங்கேற்கும் போட்டியாளர்களின் பட்டியல் குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ள நிலையில் அதன் மொத்த பட்டியலும் தற்போது வெளியாகியுள்ளது.

 பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முதன்மையான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 வரும் 9ம் தேதி துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் 5 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

 பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை கடந்துள்ளது. கடந்த 5வது சீசனின் டைட்டிலை ராஜு வெற்றிக் கொண்டார். ரன்னர் அப்பாக பிரியங்கா தேஷ்பாண்டே வந்தார். இந்த நிகழ்ச்சியின் வரவேற்பை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் நேரலையாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது. சூட்டிங் உள்ளிட்ட காரணங்களால் இந்த நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் இடையிலேயே வெளியேறினார்.

அடுத்தடுத்த ப்ரமோக்கள்

அடுத்தடுத்த ப்ரமோக்கள்

தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கினார். ஆனாலும் பிக்பாஸ் அளவிற்கு இந்த நிகழ்ச்சி வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தற்போது 6வது சீசனில் அடியெடுத்து வைக்கவுள்ளது பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் வெளியாகி வருகின்றன. நிகழ்ச்சி 24 மணிநேரமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிரப்பாக உள்ளதாக கமல் அறிவித்துள்ளார்.

போட்டியாளர்கள் அறிவிப்பு

போட்டியாளர்கள் அறிவிப்பு

இதனிடையே, நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் மேற்கொள்ளப்படாமல் உள்ளது. ஆயினும் சமூக வலைதளங்களில் போட்டியாளர்களின் முழு பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜே ரக்ஷன் மற்றும் அஞ்சனா, பாரதி கண்ணம்மா ரோஷினி ஹரிப்பிரியன், சீரியல் நடிகைகள் அர்ச்சனா மற்றும் ஸ்ரீநிதி, சூப்பர் சிங்கர் ராஜலஷ்மி, ரவீந்தர் -மகாலட்சுமி, சரவணன் மீனாட்சி புகழ் ரச்சிதா மகாலட்சுமி, மைனா நந்தினி மற்றும் ஜிபி முத்து ஆகியோர் கலந்துக் கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. லிஸ்ட்டில் பிரபல தொகுப்பாளர் டிடியின் பெயரும் உள்ளது.

விரைவில் போட்டியாளர்கள் அறிவிப்பு

விரைவில் போட்டியாளர்கள் அறிவிப்பு

இதுவரை 5 சீசன்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனை மிகவும் பரபரப்பாக கொடுக்க விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. அதன்படி மிகவும் முக்கியமான ரசிகர்களை வெகுவாக கவர்ந்த போட்டியாளர்களையும் களமிறக்கவுள்ளது. இதனிடையே இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X