மீன் குழம்பு சாப்பிட்ட ஜிபி முத்து.. ஷிவின் கணேசனை கட்டியணைத்து பாராட்டு!

சென்னை : 20 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது ஒரு வாரமாக தனது ஒளிபரப்பை மேற்கொண்டுள்ளது.

இந்த சீசன் விஜய் டிவியில் மட்டுமில்லாமல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரலையாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் டிவியை காட்டிலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ் தன்னுடைய 6வது சீசனை கடந்த 9ம் தேதி முதல் துவக்கி தொடர்ந்து இன்றைய தினம் 6வது நாளை எட்டியுள்ளது. இந்த சீசனில் 20 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் களமிறங்கியுள்ளனர். பலதரப்பட்ட இடங்களை சேர்ந்த போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் ஒன்றாக சங்கமித்துள்ளனர்.

முதல் போட்டியாளர் ஜிபி முத்து

முதல் போட்டியாளர் ஜிபி முத்து

நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக பிரபல யூடியூபர் ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இவர் இந்த நிகழ்ச்சியின் பிரதான போட்டியாளராகவும் மாறியுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இவரது செயல்பாடுகள் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இவருக்காகவே இந்த ஷோவை பார்க்கத் துவங்கியுள்ளதாக பிரபல யூடியூபர் மதன் கௌரி உள்ளிட்ட பலர் தெரிவித்துள்ளனர்.

இயல்பாக பழகும் ஜிபி முத்து

இயல்பாக பழகும் ஜிபி முத்து

சக போட்டியாளர்கள் அனைவரிடமும் இயல்பாக பழகும் ஜிபி முத்து, மற்றவர்களுடன் கொண்டாட்டமாக செயல்படுவது, அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வது, மற்றவர்கள் தன்னுடன் சண்டை பிடிக்கும்போது கண்கலங்குவது என தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவருக்காக ஜிபி முத்து ஆர்மியும் துவங்கப்பட்டுள்ளது.

ஜிபி முத்து ஆர்மி

ஜிபி முத்து ஆர்மி

அந்த ஆர்மி பக்கத்தில் பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்துவின் அடுத்தடுத்த செயல்பாடுகள், அவரிடம் சண்டை பிடித்த தனலட்சுமிக்கு எதிரான பதிவுகள், அவரது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், ஜிபி முத்துவின் முந்தையை வீடியோக்கள் என அனைத்தையும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மீன்குழம்பு சாப்பிட்ட ஜிபி முத்து

மீன்குழம்பு சாப்பிட்ட ஜிபி முத்து


இதனிடையே அவர் மீன்குழம்பு சாப்பிட்ட வீடியோ வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில் அவர் தன்னுடைய மனைவியிடம் தான் மீன்குழம்பு சாப்பிடுவதாகவும் செய்துக் கொடுத்த சாந்தி அக்காவிற்கு நன்றி என்றும் கூறுகிறார். ஆனால் அந்த குழம்பை ஷிவின் கணேசன்தான் செய்தார் என்று சாந்தி தெரிவிக்கிறார்.

ஷிவின் கணேசனை கட்டியணைத்து பாராட்டு

ஷிவின் கணேசனை கட்டியணைத்து பாராட்டு

இதையடுத்து தன்னுடைய தங்கை ஷிவின் கணேசன் என்று கூறி அவரை அணைத்தபடியே தன்னுடைய மனைவிக்கு அவரை அறிமுகம் செய்கிறார். உடனே ஷிவின் தான் அவரது தங்கையா என்று கேட்கிறார். இவர்களுக்குள் நடக்கும் இந்த உரையாடலை அசீம் உள்ளிட்டவர்கள் சிரிப்புடன் பார்க்கின்றனர்.

ரசிகர்கள் ஹாப்பி

ரசிகர்கள் ஹாப்பி

இந்த வீடியோவை ஜிபி முத்து ஆர்மியில் பதிவிட்டுள்ள ரசிகர்கள், தலைவன் ஹாப்பி நாம்பளும் ஹாப்பி என்று தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் முருங்கைக்காய், கீரை உள்ளிட்டவற்றை கேட்டுவந்த ஜிபி முத்துவிற்கு தற்போது மீன் குழம்பே கிடைத்ததையடுத்து அவரது முகத்தில் அளவுகடந்த உற்சாகத்தை பார்க்க முடிந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X