அண்ணனை அழ வெச்சுட்டாங்களே.. ஜிபி முத்துவிற்காக வருத்தப்பட்ட பிரபலங்கள்!

சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அனைவரையும் தொடர்ந்து கவர்ந்து வருகிறார் ஜிபி முத்து.

பிக்பாஸ் வீட்டில் இவரது செயல்பாடுகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இவருக்காக தனியாக ஆர்மி துவங்கும் அளவிற்கு இவர் அனைவரையும் கவர்ந்துள்ளார்.

ஜிபி முத்துவை கலாய்க்கும் அவரிடம் சண்டை போடும் சக போட்டியாளர்களை வைத்து செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த 9ம் தேதி பிரம்மாண்டமான துவக்க நிகழ்ச்சியுடன் துவங்கியுள்ளது. இன்றைய தினம் 4வது நாளாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதையொட்டி விஜய் டிவி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தமிழ் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து ப்ரமோக்களை வெளியிட்டு வருகின்றன.

முதல் போட்டியாளர் ஜிபி முத்து

முதல் போட்டியாளர் ஜிபி முத்து

இதனிடையே இந்த நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிரபல யூடியூபர் ஜிபி முத்து தன்னுடைய கள்ளங்கபடமற்ற செயல்பாடுகளால் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்து வருகிறார். இவருக்காக ரசிகர்கள் ஆர்மி துவங்கும் வகையில் இவர் அனைவரையும் அட்ராக்ட் செய்துள்ளார்.

ஜிபி முத்துவிடம் சண்டையிடும் போட்டியாளர்கள்

ஜிபி முத்துவிடம் சண்டையிடும் போட்டியாளர்கள்


பிக்பாஸ் போட்டியாளர்கள் தினந்தோறும் இவரை கலாய்த்தும் இவரிடம் சண்டையிட்டும் வருகின்றனர். அந்த வகையில் ஜனனி, ஆயிஷா மற்றும் தனலட்சுமி போன்றவர்கள் ஜிபி முத்துவிடம் பல தருணங்களில் சண்டையிடும் ப்ரமோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஜிபி முத்துவிடம் தனலட்சுமி சண்டை

ஜிபி முத்துவிடம் தனலட்சுமி சண்டை

அந்த வகையில் தனலட்சுமி, ஜிபி முத்துவிடம் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார். இதையடுத்து ஜிபி முத்து ஆர்மியை சேர்ந்த ரசிகர்கள், தனலட்சுமி நிகழ்ச்சியில் இருந்து விரைவில் எலிமினேட் ஆவார் என்று ஆரூடம் தெரிவித்து வருகின்றனர். இந்த வாரமே இது நடக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

வாய்ஸ் கொடுத்த பிரபல நடிகை

வாய்ஸ் கொடுத்த பிரபல நடிகை

ஜிபி முத்துவை அழவைத்த தனலட்சுமியும் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில்தான் இருந்தார். அவரை வைத்து ரசிகர்கள் மீம்ஸ் மற்றும் கமெண்ட்டுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர். ரசிகர்கள் ஒருபுறம் இதுபோல செய்துவர பிரபலங்களும் இதில் இணைந்துள்ளனர். பிரபல நடிகையும் கணேஷ் வெங்கட்ராமின் மனைவியுமான நிஷா, பிக்பாஸ் அண்ணனையே அழ வச்சுட்டாங்களே என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மதன் கௌரி பதிவு

மதன் கௌரி பதிவு

இதனிடையே பிரபல யூடியூபர் மதன் கௌரியும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜிபி முத்துவிற்காக மட்டுமே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்த சீசனில் ஜிபி முத்துவால் மட்டுமே அதிகமான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருவதாக பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X