எலிமினேஷனுக்கு நேரடி நாமினேஷனில் இணையும் 4 பேர்.. பிக்பாஸ் வீட்டில் ரெடியாகும் அடுத்த ட்விஸ்ட்!

சென்னை : நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்றைய தினம் பிரம்மாண்டமான அளவில் துவங்கியுள்ளது.

இந்த சீசன் குறித்த பல்வேறு ப்ரமேோக்களை அடுத்தடுத்து கமல் மூலம் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது விஜய் டிவி.

இதனிடையே இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைவரும் இணைந்து உற்சாகமாக நடனம் ஆடி அசத்தியுள்ளனர்.

 பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்கு உள்ளான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்றைய தினம் சிறப்பான கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கடந்த 5 சீசன்களை போலவே கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். நேற்றைய தினம் அனைத்து போட்டியாளர்களையும் சிறப்பாக அறிமுகம் செய்து பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

ஆரம்பமே அமர்க்களம்

ஆரம்பமே அமர்க்களம்

இந்நிலையில் இன்றைய பொழுது பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும் சிறப்பாக பொழுதாக விடிந்துள்ளது. ஆரம்பமே அமர்க்களமாக அனைவரும் இணைந்து எங்க ஏரியா உள்ள வராத என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டனர். ஜிபி முத்துதான் இந்த ஆட்டத்தில் முதன்மையாக காட்டப்பட்டார். அவர்களின் உற்சாகம் பார்வையாளர்களுக்கும் கடத்தப்பட்டது.

முதல் ப்ரமோ வெளியீடு

முதல் ப்ரமோ வெளியீடு

இதனிடையே தற்போது நிகழ்ச்சியின் முதல் ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் வழக்கமான செயல்பாடாக, ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவராக வந்து நிகழ்ச்சியில் தங்களை குறைவாக கவர்ந்த இருவரை காரணத்துடன் கூற வேண்டும் என்று ஜனனி வாசித்தார். இதையடுத்து ஒவ்வொருவராக வந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். ஜிபி முத்து அனைவரையும் பிடித்துள்ளதாக கூற, அதை மற்ற போட்டியாளர்கள் ஏற்கவில்லை.

 நேரடி நாமினேஷன்

நேரடி நாமினேஷன்

இதனிடையே போட்டியாளர்களில் நான்கு பேர் அடுத்தவார எலிமினேஷனில் நேரடி நாமினேஷன் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிக்பாஸ் கூறுகிறார். இவ்வாறாக புதிய ப்ரமோவில் கூறப்பட்டுள்ளது. யார் யார் மற்றவர்கள் குறித்த எந்த மாதிரியான கருத்துக்களையும் விமர்சனங்களையும் கூறுகிறார்கள் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

6வது சீசனில் பிக்பாஸ்

6வது சீசனில் பிக்பாஸ்

அடுத்த வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் மனிதனின் மனநிலையை மையமாக கொண்டு கடந்த 2017ம் ஆண்டில் தமிழில் துவங்கப்பட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு கமல்ஹாசனின் தொகுப்பும் இணைய மிகவும் பரபரப்பான நிகழ்ச்சியாக மாறியுள்ளது பிக்பாஸ். தற்போது 6வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X