கொண்டாட்டத்திற்கான நேரம்.. அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் சீசன் 6 ப்ரமோ இதோ!

சென்னை : விஜய் டிவியில் மக்களின் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை 5 சீசன்களை இந்தத் தொடர் கடந்துள்ளது.

கோடிக்கணக்கான பார்வையாளர்களை கொண்ட பிக்பாஸை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது கூடுதல் பலம். கடந்த 5வது சீசனில் டைட்டில் வின்னராக ராஜு தேர்வானார். இரண்டாவது இடத்தை பிரியங்கா பிடித்தார்.

பிக்பாஸ் அல்டிமேட் என ஒரு நிகழ்ச்சியும் இடையில் ஒளிபரப்பானது. இதனால் வழக்கமான பிக்பாஸ் தள்ளிப்போனது. இதனிடையே விரைவில் இந்த நிகழ்ச்சியின் 6-வது சீசன் துவங்கவுள்ளது. அதன் அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

விஜய் டிவியில் தொடர்ந்து கடந்த 5 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி முதல் சீசனிலேயே மிகவும் சிறப்பாக ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைக்கும் வகையில் அமைந்திருந்தது. ரசிகர்கள் தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்களுக்காக காத்திருக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி அவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.

தொகுப்பாளர் கமல்ஹாசன்

தொகுப்பாளர் கமல்ஹாசன்

இந்த நிகழ்ச்சியின் சிறப்பான வரவேற்பிற்கு முக்கியமான காரணங்களில் தொகுப்பாளர் கமல்ஹாசனும் ஒருவர். போட்டியாளர்களை அவர் சிறப்பாக வழிநடத்தி சென்றது இந்த நிகழ்ச்சியின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் 5 சீசன்கள் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளன.

டைட்டிலை வென்ற ராஜு

டைட்டிலை வென்ற ராஜு

கடந்த 5வது சீசனில் ராஜு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து டைட்டிலை கவர்ந்தார். இரண்டாவது இடத்திற்கு பிரியங்கா தேர்வானார். இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த சிறப்பான வரவேற்பை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியும் நேரலையாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிய நிலையில் அவர் இடையில் விலகினார். தொடர்ந்து சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆனால் இந்த நிகழ்ச்சி எதிர்பார்த்த அளவில் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. தினந்தோறும் காத்திருந்து பிக்பாஸ் வீட்டில் நடப்பதை பார்ப்பதிலேயே ரசிகர்களுக்கு அதிகமாக சுவாரஸ்யம் காணப்பட்டது.

விரைவில் 6வது சீசன்

விரைவில் 6வது சீசன்

இதனிடையே விரைவில் இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தெலுங்கிலும் விரைவில் 6வது சீசன் துவங்கவுள்ளது.

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 ப்ரமோ

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 ப்ரமோ

தெலுங்கில் இந்த நிகழ்ச்சியை பிரபல டோலிவுட் ஹீரோ நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் தெலுங்கில் இந்த நிகழ்ச்சி விரைவில் துவங்கவுள்ளது. இதனிடையே இந்த நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. மிகவும் கலர்புல்லாக அந்த ப்ரமோ காணப்படுகிறது.

கலர்புல்லான ப்ரமோ

கலர்புல்லான ப்ரமோ

திருமணம் முடிந்து தன்னுடைய மாமியார் வீட்டிற்கு செல்வதற்கு முன்னதாக, தன்னுடைய தந்தை மற்றும் தாயின் கைகளைப் பிடித்துக் கொண்டு, மணப்பெண் அழுதுக் கொண்டிருக்க, இடையில் நேரத்தை பார்க்கும் தாய் மற்றும் தந்தை அங்கிருந்து எஸ்கேப் ஆகின்றனர். என்னடா இது என்று பார்த்தால் அவர்கள் இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்க போகின்றனர். இப்படியாக அந்த ப்ரமோ காணப்படுகிறது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு

தெலுங்கில் நாகர்ஜுனா தொகுத்து வழங்கிவரும் இந்தத் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ளது. நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக அந்தப் ப்ரமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தெலுங்கு ஆடியன்சை வெகுவாக கவர்ந்த இந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ள நிலையில், தமிழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X