கேப்டன் பதவிக்காக கடிகாரத்தில் தொங்கிய ஜிபி முத்து -ஜனனி.. தெறித்து ஓடிய சாந்தி!

சென்னை : கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பான துவக்க விழாவுடன் துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது ஒரு வாரத்தை கடந்துள்ளது.

கடந்த சீசன்களை போல இல்லாமல் இந்த நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே தெறிக்க விடப்பட்டு வருகிறது. ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

வாரயிறுதி நாட்களில் நிகழ்ச்சியின் போட்டியாளர்களிடம் தொகுப்பாளர் கமல் கலகலப்பாக பேசியதையும் பார்க்க முடிந்தது.

6வது சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சி

6வது சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சி

விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது பிக்பாஸ். ஒரே நிகழ்ச்சி தொடர்ந்து 5 சீசன்களை கடந்து 6வது சீசனிலும் களைகட்ட முடியுமா என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இந்தத் தொடர் விளங்குகிறது. சில பல விமர்சனங்களை இந்த நிகழ்ச்சி சந்தித்தாலும் பொதுவாக ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சியாகவே தொடர்ந்து இருந்து வருகிறது.

சிறப்பான தொகுப்பாளர்

சிறப்பான தொகுப்பாளர்

இந்த நிகழ்ச்சியின் முக்கியமான சிறப்பாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். அதிகமான போட்டியாளர்களை வித்தியாசமான இடங்களில் இருந்து வந்தவர்களை ஒரே இடத்தில் 100 நாட்கள் தங்க வைக்க முடியுமா என்ற கேள்விக்கு விடையாக இந்த நிகழ்ச்சி காணப்படுகிறது.

வித்தியாசமான துறைகளை சேர்ந்த போட்டியாளர்கள்

வித்தியாசமான துறைகளை சேர்ந்த போட்டியாளர்கள்

வித்தியாசமான துறைகளில் இருந்து ஒரே வீட்டில் தங்கி தங்களது கோபதாபங்களை, சுக துக்கங்களை பகிர்ந்து வருகின்றனர் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள். அதே நடைமுறையில் இந்த 6வது சீசனிலும் யூடியூபர்கள், மாடல்கள், நடிகைகள், சின்னத்திரை பிரபலங்கள் என பல துறைகளை சேர்ந்தவர்கள் ஒரே வீட்டில் இணைந்துள்ளனர்.

8வது நாளில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

8வது நாளில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக துவங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது ஒரு வாரத்தை கடந்துள்ளது. முதல் நாளிலேயே 4 குழுக்களாக பிரிந்து 4 டாஸ்க்குகளை வெற்றிகரமாக குழுவினர் நடைமுறை படுத்திய நிலையில், அதில் ஏற்பட்ட கோளாறுகளையும் கடந்த இரு தினங்களில் நடிகர் கமல்ஹாசனிடம் போட்டியாளர்கள் பகிர்ந்தனர்.

கேப்டன் பதவிக்கான போட்டி

கேப்டன் பதவிக்கான போட்டி

இதனிடையே தற்போது இரண்டாவது வாரத்தில் இந்த நிகழ்ச்சி காலடி எடுத்து வைத்துள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியின் கேப்டன் பதவிக்கான போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதன் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. கைப்பிடியுடன் கூடிய கடிகாரத்தில் அதிகமான நேரம் யார் தொங்கியபடி நிற்கிறார்களோ அவர்களே கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற டாஸ்க்குடன் ஜிபி முத்து, ஜனனி மற்றும் சாந்தி களமிறங்கினர்.

தெறித்து ஓடிய சாந்தி

தெறித்து ஓடிய சாந்தி

இவர்களில் ஒரு கட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் சாந்தி தெறித்து ஓடினார். இதையடுத்து ஜிபி முத்து மற்றும் ஜனனி இருவரும் இந்த கடிகாரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொங்கியபடி இருந்தனர். இதில் ஜனனி தூங்கியே விட்டார். ஜிபி முத்துவும் விட்டுத்தராமல் தொடர்ந்தார். தற்போது வெளியாகியுள்ள இந்த ப்ரமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

யார் முதல் கேப்டன்?

யார் முதல் கேப்டன்?

இந்தப் ப்ரமோவையொட்டி, இன்றைய தினம் இந்த போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என்பது குறித்து தெரியவரும். கடந்த வாரத்தில் ஜனனி ஒரு குழுவின் தலைவராக செயல்பட்டு சிறப்பான விமர்சனங்களை பெற்றார். ஆனால் ஜிபி முத்து போட்டியாளராகவே இருந்த நிலையில் தற்போது அவரும் கேப்டன் பதவிக்கான போட்டியில் இறங்கியுள்ளார்.

ரசிகர்களை குதூகலப்படுத்திய ஜிபி முத்து -ஜனனி

ரசிகர்களை குதூகலப்படுத்திய ஜிபி முத்து -ஜனனி

இந்த ரணகளத்திலும் ரசிகர்களுக்கு குதூகலத்தை கொடுக்கும் வகையில் ஜனனி மற்றும் ஜிபி முத்து இருவரும் கடிகாரத்தில் தொங்கியபடி டான்சும் ஆடினர். அவர்களை சக போட்டியாளர்கள் உற்சாகப்படுத்தும் வகையில் பலவகையான சவுண்ட்களை கொடுத்தனர். இவ்வாறு இன்றைய நிகழ்ச்சியின் இந்தப் ப்ரமோ ரசிகர்களை கவரும் வகையில் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X