எங்க ஏரியா உள்ள வராத.. உற்சாக குத்தாட்டம் போட்ட ஜி.பி.முத்து.. ஆட்டம் போட்ட பிக்பாஸ் டீம்!
சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி நேற்றைய தினம் பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கியுள்ளது.
நிகழ்ச்சியில் ஆண், பெண், திருநங்கை என 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களை அறிமுகம் செய்து பிக்பாஸ் வீட்டிற்குள் தொகுப்பாளர் கமல்ஹாசன் அனுப்பி வைத்துள்ளார்.
இதனிடையே போட்டியாளர்கள் அனைவரும் எங்க ஏரியா என்று குத்தாட்டம் போட்ட வீடியோவின் ப்ரமோவை டீம் வெளியிட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க, பிக்பாஸ் சீசன் 6 நேற்றைய தினம் பிரம்மாண்டமான துவக்க விழாவுடன் துவங்கியுள்ளது. இதில் 10 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் மற்றும் ஒரு திருநங்கை என 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்றைய தினம் இவர்கள் அனைவரையும் அறிமுகம் செய்து நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்துள்ளார்.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
இந்த சீசனில் சீரியல் நடிகைகள், விஜேக்கள், மாடல்கள், யூடியூப் பிரபலங்கள் என கலவையான போட்டியாளர்கள் காணப்படுகின்றனர். டான்ஸ் மாஸ்டர்களும் நிகழ்ச்சியில் இணைந்துள்ளனர். அதனால் இந்த சீசனில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு குறைவில்லாமல் இருக்கும் என்று முன்னதாக கணிக்கப்பட்டது.

துவக்க விழாவில் அசத்திய போட்டியாளர்கள்
அதற்கு ஏற்றாற்போல நேற்றைய தினம் துவக்கவிழாவிலேயே சாந்தி அரவிந்த், ரச்சிதா என சிறப்பான ஆட்டத்துடன்தான் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் நுழைந்துள்ளனர். இதனிடையே இன்றைய தினம் இவர்கள் அனைவரும் இணைந்து எங்க ஏரியா உள்ள வராத என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளனர்.

ஆட்டம் போட்ட டீம்
தற்போது இந்தப் ப்ரமோவை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் ஒருவித அச்சத்துடனும் தடுமாற்றத்துடனும் காணப்பட்ட பிரபல யூடியூபர் ஜிபி முத்துவும் இன்றைய தினம் அனைவருடனும் இணைந்து ஆட்டம் போட்டுள்ளார். சாந்தி உள்ளிட்ட அனைவரும் இந்தப் பிரமோவில் உற்சாக நடனம் ஆடியுள்ளனர்.

உற்சாகமாக துவங்கிய நிகழ்ச்சி
மொத்தத்தில் முதல் நாளிலேயே மிகவும் உற்சாகத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியிலும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் நேரலையாகவும் ஒளிபரப்பாக உள்ள நிலையில், இந்த சீசன் சிறப்பாக களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலக்கல் துவக்கம்
நேற்றைய தினம் துவக்க விழாவிலேயே இந்த நிகழ்ச்சி களைகட்டியது. ஜிபி முத்துவை கலாய்த்த கமல், த்ரிஷாவிற்கு டஃப் கொடுக்க தயாரான இலங்கைப் பெண் ஜனனி என அடுத்தடுத்து களைகட்டியது. சாந்தி உள்ளிட்டவர்களின் நடனமும் சிறப்பாக அமைந்திருந்தது.


Click it and Unblock the Notifications











