பிக்பாஸ் சீசன் 6.. முதல் வீக்லி டாஸ்க்.. பட்டையை கிளப்ப தயாரான 4 டீம்ஸ்!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் கிராண்ட் ஓப்பனிங்குடன் துவங்கியுள்ளது.
போட்டியாளர்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் இவற்றுடன் போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற அவர்களின் நம்பிக்கையும் நிகழ்ச்சியில் இணைந்துள்ளது.
இவர்களை சிறப்பாக எதிர்கொண்ட ஆங்கர் கமல்ஹாசன், அவர்களிடம் கூலாகவும், மிரட்டலாகவும், பாசமாகவும் பல்வேறு தொனிகளில் பேசி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் நேற்றைய தினம் துவங்கியுள்ளது. வழக்கமாக பெரிய அளவிலான நடிகர்கள் உள்ளிட்டவர்களை நம்பி களமிறங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தமுறை அவ்வாறு இல்லாமல் ரசிகர்களை கவர்ந்த ஆனால் அதிகமாக பிரபலமாகாதவர்களை கொண்டு களத்தில் இறங்கியுள்ளது.

20 போட்டியாளர்கள்
ஜிபி முத்து, ராபர்ட், ஷாந்தி அரவிந்த், இலங்கை பெண் ஜனனி என ஆண், பெண் போட்டியாளர்களாக 20 பேரை கொண்டு இந்த சீசன் களமிறங்கியுள்ளது. கமல்ஹாசன் மட்டுமே ரசிகர்களின் உள்ளம் கவர் கள்வனாக நிகழ்ச்சியில் உள்ளார். மற்றவர்கள் அனைவரும் தங்களது திறமையை நிரூபிக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியுள்ளவர்களாகவே காணப்படுகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த ஜிபி முத்து
நிகழ்ச்சியில் ஜிபி முத்து அதிகமாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவருக்காக ஆர்மிக்களையும் ரசிகர்கள் துவங்கி விட்டனர். தொடர்ந்து இவர் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலேயே உள்ளார். காலையிலேயே சக போட்டியாளர்கள் இவரை கலாய்த்த நிலையில், பதட்டத்துடன் தன்னுடைய ரியாக்ஷனை வெளிப்படுத்தினார். தொடர்ந்து அனைவருடனும் இணைந்து சூப்பராக டான்ஸ் செய்தார்.

முதல் வீக்லி டாஸ்க்
இதனிடையே நிகழ்ச்சியின் முதல் வீக்லி டாஸ்கை சீரியல் நடிகை சாந்தி வாசித்தார். அதில் கிட்சன், பாத்திரங்கள், கிளீனிங் மற்றும் பாத்ரூம் என 4 அணிகளாக பிரிந்து இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் கிளப் ஹவுஸ் ஆக மாறப் போவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த கிளப்பின் ஓனரை தேர்வு செய்வது குறித்தும் அவர் கூறியுள்ளார்.

4 குழுக்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவ்வாறு குழுக்களாக இணைந்து வேலை செய்யும்போது அவர்களிடையே மோதல் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டாகும். இவற்றை வைத்தே இந்த நிகழ்ச்சியை களைகட்ட வைப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இதனிடையே எலிமினேஷன் குறித்தும் சொல்லப்பட்டுள்ளதால் இனி வரும் நாட்கள் நிகழ்ச்சி சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











