Don't Miss!
- News
மின்மிகை நகராக மாறிய ஆர்.கே.நகர் தொகுதி- ஜெயலலிதா செய்யாததைச் செய்து தந்த ஸ்டாலின்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Technology
ஜியோவுடன் இணைந்து திருப்பதி தேவஸ்தானம் அறிமுகம் செய்த புதிய ஆப்.! எதற்குத் தெரியுமா?
- Finance
கூகுள் ஊழியரின் கண்ணீர்..பிரசவ அறை,4கை குழந்தை, தாய் மரணம்,இண்டர்வியூவ்-க்கு மத்தியில் பணிநீக்கம்..!
- Sports
என்ன தெரிகிறது அங்கு??.. போட்டியின் போது அம்பயர் எராஸ்மஸ் செய்த காரியம்.. இணையத்தில் சிரிப்பலை!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த வழிகளில் பணம் சம்பாதிப்பவர்கள் வாழும்போதே நரகத்தை அனுபவிப்பார்களாம்...!
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய புதிய ஹூண்டாய் ஐ10... விலை இவ்ளோதானா! மாருதி, டாடா கார்களின் கதையை முடிக்க போகுது!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
விக்ரமன் யாரைப்பத்தியும் பின்னாடி பேசினது இல்லையா.. கேள்வி கேட்கும் ரசிகர்கள்!
சென்னை : கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தற்போது 6வது சீசனை நடத்தி வருகிறது.
இன்றைய தினம் 56வது நாளில் இந்த நிகழ்ச்சி எட்டியுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களிடம் பேசி வருகிறார்.
அப்போது நிகழ்ச்சியில் புறம் பேசுபவர்கள் குறித்த கமலின் கேள்விக்கு ஹவுஸ்மேட்ஸ் சில போட்டியாளர்களை சுட்டிக் காட்டினர்.
ஆத்திரக்காரனுக்கு
புத்தி
மட்டு..
அசீமுக்கு
அறிவே
இல்லை
என
விளாசிய
கமல்..
தரமான
சம்பவம்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டில் துவங்கப்பட்டு தொடர்ந்து அடுத்தடுத்த 5 சீசன்களை முடித்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது. ஆனாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி அளவிற்கு அல்டிமேட் நிகழ்ச்சி களைகட்டவில்லை.

56வது நாளை எட்டிய நிகழ்ச்சி
இதனிடையே தற்போது 6வது சீசன் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு தற்போது 56வது நாளில் நிகழ்ச்சி அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிகழ்ச்சி 20 போட்டியாளர்களுடன் களமிறங்கிய நிலையில், ஒவ்வொரு வாரமும் எலிமினேஷனில் சில போட்டியாளர்கள் வெளியேறினர். முதல் போட்டியாளர் ஜிபி முத்து தானாக விருப்பப்பட்டு வெளியேறினார்.

சுவாரஸ்ய நிகழ்வுகள்
தொடர்ந்து சுவாரஸ்யமான டாஸ்க்குகள், வாக்குவாதங்கள், சண்டைகள், அடிபிடி சண்டைகள் உள்ளிட்டவற்றையும் இந்த நிகழ்ச்சி கொடுத்து வருகிறது. தினந்தோறும் இரவில் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் வகையில் அடுத்தடுத்த எபிசோட்கள் காணப்படுகின்றன.

புறம் பேசும் போட்டியாளர்கள்
இதனிடையே இன்றைய தினம் இந்த நிகழ்ச்சி 56வது நாளை எட்டியுள்ளது. இதையொட்டி இரண்டாவது ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் புறம் பேசுபவர்கள் குறித்த தொகுப்பாளர் கமலின் கேள்விக்கு ஹவுஸ்மேட்ஸ் பதிலளிப்பதாக காணப்படுகிறது. இதில் தனலட்சுமி மற்றும் ஜனனி, மைனா அதிகமாக புறம் பேசுவதாக குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, மைனா அதிகமான அளவில் தனலட்சுமிக்கு உதவி செய்தாலும் அவர் தொடர்ந்து மைனாவை வெறுத்து வருவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

அசீமை கைக்காட்டிய விக்ரமன்
இதேபோல
விக்ரமன்
அசீமை
புறம்
பேசுவதாக
தெரிவித்துள்ளார்.
இதற்கு
கமெண்ட்
செய்துள்ள
ரசிகர்கள்,
விக்ரமன்
யாரைப்
பற்றியும்
பின்னால்
பேசியதே
இல்லையா
என்று
கேள்வி
எழுப்பியுள்ளனர்.
மேலும்
கமல்
எதுகுறித்து
கேட்டாலும்
அதற்கு
விக்ரமன்
அசீமை
கைகாட்டி
பேர்
வாங்கி
விடுவதாகவும்
கலாய்த்துள்ளனர்.
அவரை
பூமர்
விக்ரமன்
என்றும்
தொடர்ந்து
கலாய்த்து
வருகின்றனர்.

அசீம் குறித்த விக்ரமன் கமெண்ட்
இதேபோல அசீம் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ஹவுஸ்மேட்சிடம் மட்டுமில்லாமல் தொகுப்பாளரிடமும் தொடர்ந்து வாங்கிக் கட்டிக் கொள்வதாகவும் கமெண்ட்ஸ் எழுந்துள்ளது. அதேபோல விக்ரமன் அசீம் குறித்து பேசினால் மட்டுமே வரவேற்பு பெறுவதாகவும், ப்ரமோவில் இடம்பெற வேண்டுமென்றாலும் அவர் அசீம் குறித்து பேசினால் மட்டுமே நடக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.