ஜிபி முத்து ரசிகர்களை டார்கெட் செய்கிறாரா மைனா.. ட்ரோல் செய்த ரசிகர்கள்!
சென்னை : விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது பரபரப்பான எபிசோட்களை ஒளிபரப்பு செய்து வருகிறது.
நிகழ்ச்சி இன்றைய தினம் 14வது நாளை எட்டியுள்ளது. நேற்று நிகழ்ச்சியின் வாரயிறுதியையொட்டி கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் பேசினார்.
இன்றைய தினமும் கமல்ஹாசன் நிகழ்ச்சியின் போட்டியாளர்ளை சந்திக்கவுள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய தினம் 14வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 13 நாட்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பல டாஸ்க்குகளுடன் நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியில் அடுத்தடுத்த ட்விஸ்ட்களும் காணப்பட்டன. முதல் வாரத்திலேயே ஜிபி முத்துவுடன் சண்டை பிடித்த போட்டியாளர் தனலட்சுமி, இந்த வாரத்தில் கோலாருடன் சண்டை போட்டார்.

ஹைலைட்டான ஆயிஷா -அசீம் சண்டை
இதையடுத்து நிகழ்ச்சியை சிறப்பாக நடக்க காரணமாக இருந்ததாக ஒரு சில ரசிகர்கள் தனலட்சுமிக்கு கைக்கொடுத்தனர். தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்தார் தனலட்சுமி. இந்த வாரத்தில் ஆயிஷா மற்றும் அசீமிற்கு இடையிலான சண்டைதான் ஹைலைட்டாக அமைந்தது.

விக்ரமனுக்கு கமல் சப்போர்ட்
தன்னை தொடர்ந்து வம்பிழுத்த, வாடி போடி என்று பேசிய அசீமை நோக்கி தன்னுடைய ஷுவை கழட்டிக் காண்பித்தார் ஆயிஷா. அவருக்கு சப்போர்ட் செய்த விக்ரமனுக்கும் தொகுப்பாளர் கமல்ஹாசன் நேற்றைய நிகழ்ச்சியில் சப்போர்ட் செய்ததை பார்க்க முடிந்தது. இதனிடையே சாந்தி எலிமினேட் ஆகியுள்ளார்.

சாந்தியை சப்போர்ட் செய்த ரசிகர்கள்
இதனிடையே இன்றைய தினம் வெளியாகியுள்ள இரண்டாவது பிரமோவில் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். கடந்த இரு வாரங்களாக சிறப்பாக சமைத்துக் கொடுத்து சக போட்டியாளர்களை அரவணைத்து சென்ற அவருக்கு பதிலாக ஒன்றுமே செயல்படாமல் உள்ள நிவாஷினியை வெளியேற்றியிருக்கலாம் என்று ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்துள்ளார்.

ஜிபி முத்துவையும் விட்டு வைக்காத ரசிகர்கள்
இதனிடையே குடும்ப கஷ்டத்தால் தற்கொலை செய்தபோது குடும்பம், குழந்தைகள் குறித்து யோசிக்காத ஜிபி முத்து, இன்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சி இல்லையென்றாலும் தன்னுடைய யூடியூப் தொழில் உள்ளதால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவரைப் பற்றி கவலைப்படாமல் நிகழ்ச்சியை மட்டும் என்ஜாய் செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஜிபி முத்து ரசிகர்களுக்கு வலை?
இந்நிலையில் சிங்கம் போல வீட்டை வழிநடத்துபவர் ஜிபி முத்து என்று புதிய ப்ரமோவில் மைனா நந்தினி தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் ஜிபி முதது ரசிகர்களை தன்வசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இதன்மூலம் டைட்டிலை வெற்றி பெற அவர் கனவு காணுவதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சியை குலைத்த ஜிபி முத்து?
இதனிடையே மற்ற ஒருவரது வாய்ப்பை பறித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜிபி முத்து இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தையும் தற்போது குலைத்துள்ளதாகவும் கமெண்ட்ஸ் எழுந்துள்ளது. இதனிடையே முத்து இல்லாத நிகழ்ச்சி போர் அடிப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











