உங்க வழக்கமான ஸ்டைலில் திட்டக்கூடாது.. ஜி.பி.முத்துவுக்கு எச்சரிக்கை விடுத்த கமல்!
சென்னை : பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பிரம்மாண்டமான அளவில் இன்றைய தினம் துவங்கியுள்ளது.
நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக ஜிபி முத்து நுழைந்துள்ளார். அவருடன் தொகுப்பாளர் கமல்ஹாசன் பேசினார்.
இவர் டிக்டாக் மற்றும் ரீல்ஸ் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இன்றைய தினம் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமான துவக்க நிகழ்ச்சிகளுடன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி முன்னதாக 5 சீசன்களை கடந்த நிலையில் தற்போது 6வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. முன்னதாக 5 சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவுள்ளார்.

விதவிதமான ப்ரமோக்கள்
கடந்த சில வாரங்களாக பல்வேறு ப்ரமோக்களுடன் ரசிகர்களை ஆரவாரப் படுத்திவந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்றைய தினம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் பல வித்தியாச முயற்சிகளுடன் துவங்கியுள்ளது. கடந்த சீசன்களை போலவே இந்த நிகழ்ச்சியிலும் சுவாரஸ்யங்களுக்கு குறைவிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் போட்டியாளர் ஜிபி முத்து
இந்த நிகழ்ச்சி இன்று துவங்கி 100 நாட்கள் நடைபெறவுள்ளது. ஆண், பெண் மற்றும் திருநங்கை என 20 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சிக்காக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். முதல் போட்டியாளராக பிரபல யூடியூபர் ஜிபி முத்து சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள நிலையில், அவருடன் கமல் பேசினார்.

தற்கொலை முயற்சி
நான்கு குழந்தைகள், தம்பி இறந்துவிட தம்பியின் குடுமபத்தையும் இரண்டு குழந்தைகளையும் பராமரித்து வருவதாக ஜிபி முத்து தெரிவித்துள்ளார். கொரோனா லாக்டவுன் காலத்தில் தற்கொலை முயற்சி செய்த ஜிபி முத்துவிற்கு கைக்கொடுத்தது டிக் டாக் என்றும் அவர் பகிர்ந்துக் கொண்டார்.

கமல் அறிவுறுத்தல்
இதையடுத்து அவரது வழக்கமான ஸ்டைலில் யாரையும் திட்டக்கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தினார் கமல்ஹாசன். இதையடுத்து தனியாக பிக்பாஸ் வீட்டிற்குள் விடப்பட்ட ஜிபி முத்து தனக்கு ஒருமாதிரியாக வருவதாகவும் யாரையாவது உடனடியாக அனுப்பவும் கோரிக்கை விடுத்தார். முன்னதாக அவரது குடும்பத்தினர் வந்திருந்து அவரை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்தனர்.


Click it and Unblock the Notifications











