களைகட்டும் பிக்பாஸ் சீசன் 6 துவக்கவிழா.. சூப்பரான களைநிகழ்ச்சிகள்.. சிறப்பான மேடை!
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் தொகுப்பில் இன்று முதல் துவங்கவுள்ளது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி.
ரசிகர்களின் நீண்டகால காத்திருப்பிற்கு விடையாக இன்று முதல் இந்த நிகழ்ச்சி துவங்கவுள்ளது. இதையொட்டி நேற்றைய தினமே போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு சென்று விட்டனர்
இன்றைய தினம் நிகழ்ச்சியின் துவக்கவிழாவையொட்டி பிரம்மாண்டமான அளவில் கலைநிகழ்ச்சிகளும் ஒளிபரப்பாக உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சி
விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியான பிக்பாஸ், 5 சீசன்களை கடந்து இன்றைய தினம் 6வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சியாக இந்த நிகழ்ச்சி இருந்து வருகிறது. ரசிகர்கள் இந்த சீசனுக்காக நீண்ட நாட்களாக காத்திருந்தனர்.

இன்று பிரம்மாண்ட துவக்கம்
இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு நிகழ்ச்சி இன்றைய தினம் துவங்கவுள்ளது. இன்று மாலை 6 மணியளவில் நிகழ்ச்சி சிறப்பான களைநிகழ்ச்சிகளுடன் துவங்கவுள்ளது. இதையொட்டி விஜய் டிவி அடுத்தடுத்த ப்ரமோக்களை வெளியிட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸ் வீட்டில் நிகழ்ச்சிக்காக காத்திருக்கின்றனர்.

பிரம்மாண்ட கலைநிகழ்ச்சிகள்
துவக்கவிழாவையொட்டி விஜய் டிவி பல பிரம்மாண்டமான கலைநிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளது. இதையொட்டி விஜய் டிவி அடுத்தடுத்த ப்ரமோக்களையும் வெளியிட்டுள்ளது. இந்த ப்ரமோக்களில் பேசியுள்ள நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியின் துவக்கம் குறித்தும் போட்டியாளர்கள் குறித்தும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

புதிய ப்ரமோ வெளியீடு
குறிப்பாக இரண்டாவதாக வெளியாகியுள்ள ப்ரமோவில், கலைநிகழ்ச்சிகள் குறித்த காட்சிகள் காணப்படுகின்றன. இந்தக் கொண்டாட்டத்தில் கமலும் தன்னுடைய பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் கண்கள் விரிய பிக்பாஸ் ஓபனிங் குறித்தும் அவர் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தாமதமான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
கமலின் அடுத்தடுத்த கமிட்மெண்ட்கள் காரணமாக இந்த ஆண்டு சிறிது காலதாமதமாகவே பிக்பாஸ் சீசன் துவங்கியுள்ளது. ஆனால் புத்தாண்டை கடந்து இந்த நிகழ்ச்சி தனது 100 நாட்களை நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து கடந்த ஆண்டைப் போலவே தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நடத்தப்படுமா, அதை யார் தொகுத்து வழங்குவார்கள் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











