Big Boss 7 - ஒரு வீடுனாலே ஒன்னா இருக்கமாட்டாங்க.. இதுல 2 வீடா?.. பிக்பாஸ் 7 புதிய ப்ரோமோ
சென்னை: Big Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் ஏழாவது சீசனுக்கான புதிய ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் வெகு பிரபலமாகியிருக்கிறது. இதுவரை நடந்து முடிந்த ஆறு சீசன்களுக்கும் மக்கள் பெரும் வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். கடந்த சீசனில் அசீம் டைட்டில் வின்னரானார். விக்ரமன் இரண்டாவது இடத்தையும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் பெற்றனர். சூழல் இப்படி இருக்க பிக்பாஸ் ஏழாவது சீசன் குறித்து மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

பிக்பாஸ் 7: பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது. இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியானது. எப்போதும் ஒரு வீட்டில் நடக்கும் பிக்பாஸ் இந்த முறை இரண்டு வீடுகளில் நடக்கப்போகிறது. இரண்டு வீடுகளில் பிக்பாஸ் போட்டி எப்படி நடைபெறும்; ஏதேனும் ரூல்ஸ் மாறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.
லிஸ்ட் இதுவா?: பிக்பாஸ் ஏழாவது சீசனில் நடிகர் அப்பாஸ், பப்லு, சந்தோஷ் பிரதாப் கோவையில் பேருந்து ஓட்டிய ஷர்மிளா, நடிகை அம்மு அபிராமி, தர்ஷா குப்தா, வி.ஜே.ரக்ஷன், ஜாக்குலின், காக்கா முட்டையில் நடித்த விக்னேஷ், நடன அமைப்பாளர் ஸ்ரீதர், மாடல்கள் ரவிக்குமார், நிலா, நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை ரேகா நாயர், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகை சோனியா அகர்வால், விஜே பார்வதி, விஜே பாவனா உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியானது.

ரோபோ ஷங்கர் மகள்: மேற்கூறிய லிஸ்ட்டில் இடம்பெற்றவர்களில் ரேகா நாயர் மட்டும் தான் பிக்பாஸ் வீட்டுக்கு போகப்போவதில்லை என்று கூறியிருக்கிறார். இதற்கிடையே ரோபோ ஷங்கர் மகள் இதில் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பிக்பாஸ் ஏழாவது சீசனுக்கான புதிய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
முன்னாள் போட்டியாளர்கள்: இந்த ப்ரோமோவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே கலந்துகொண்ட ப்ரியங்கா, ஆயிஷா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கின்றனர். பியூட்டி பார்லரில் அமர்ந்தபடி அவர்கள் மூவரும் பிக்பாஸ் குறித்து பேசும்படி காட்சிகள் இருக்கின்றன. நான்காவதாக ஒரு பெண் நான்கூட பிக்பாஸுக்கு போகலாம் என்ற தொனியில் பேசுகிறார். குறிப்பாக அறந்தாங்கி நிஷா, ஒரு வீடுனாலே ஒன்னா இருக்கமாட்டாய்ங்க; இதுல ரெண்டு வீடு வேறயா என்று கூறுவது ரசிக்கும்படி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











