Big Boss 7 - எது சரினு முடிவு செஞ்சாதான் யார் சரினு தெரியும்.. பிக்பாஸ் புதிய ப்ரோமோ.. கலக்கும் கமல்
சென்னை: Big Boss 7 Promo (பிக்பாஸ் 7 ப்ரோமோ) பிக்பாஸ் ஏழாவது சீசனுக்கான புதிய ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சி வெகு பிரபலம். இதுவரை 6 சீசன்கள் நடந்து முடிந்திருக்கின்றன. முதல் சீசனுக்கு எப்படி ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்தார்களோ அதேபோல்தான் அடுத்தடுத்த சீசன்களுக்கும் வழங்கினார்கள். குறிப்பாக கடந்த சீசன் ரகளையாக சென்றது. யாரும் எதிர்பார்க்காத வகையில் அசீம் கடந்த சீசனின் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிக்பாஸ் 7: இந்த சூழலில் பிக்பாஸ் சீசன் 7 தொடர்பான எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக சில மாதங்களுக்கு முன்னதாக ப்ரோமோ வீடியோ வெளியானது. கடந்த சீசன் போலவே இந்த சீசனையும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கிறார். எனவே பிக்பாஸ் 6 போலவே பிக்பாஸ் 7ம் ரொம்பவே பரபரப்பாக நகரும் என்று நம்பியிருக்கிறார்கள் மக்கள்.
இரண்டு வீடுகள்: இந்த சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது இதுவரை ஒரு வீட்டில் மட்டுமே நடந்து வத பிக்பாஸ் இந்த சீசனில் இரண்டு வீடுகளில் நடைபெறவிருக்கிறது. அது எப்படி இரண்டு வீடுகளில் நடக்கும்; இதற்காக சில ரூல்ஸ்கள் மாற்றப்பட்டுவிட்டனவா என்ற கேள்வியும்; அதை பார்க்கும் ஆர்வமும் அதிகரித்திருக்கிறது ரசிகர்களிடம்.
யார் யார் போட்டியில்: அப்பாஸ், பப்லு, சந்தோஷ் பிரதாப் கோவையில் பேருந்து ஓட்டிய ஷர்மிளா, நடிகை அம்மு அபிராமி, தர்ஷா குப்தா, வி.ஜே.ரக்ஷன், ஜாக்குலின், காக்கா முட்டையில் நடித்த விக்னேஷ், நடன அமைப்பாளர் ஸ்ரீதர், மாடல்கள் ரவிக்குமார், நிலா, நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகை செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், நடிகை சோனியா அகர்வால், பாண்டியம்மா, விஜே பார்வதி, விஜே பாவனா உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என தகவல் வெளியானது.
புதிய ப்ரோமோ: பிக்பாஸ் ஏழாவது சீசன் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்படவிருக்கிறது. இந்நிலையில் அதுகுறித்த புதிய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் கமல் ஹாசன் தோன்றி,"எது சரி என்று முதலில் முடிவு செஞ்சாதான். யார் சரி என்பது தெரியும். பிக்பாஸ் சீசன் 7 இன்னும் ஐந்து நாட்களில்" என்று கூறுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.
முன்னதாக நேற்று வெளியான ப்ரோமோவில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே கலந்துகொண்ட ப்ரியங்கா, ஆயிஷா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கின்றனர். பியூட்டி பார்லரில் அமர்ந்தபடி அவர்கள் மூவரும் பிக்பாஸ் குறித்து பேசும்படி காட்சிகள் இருந்தான. நான்காவதாக ஒரு பெண் நான்கூட பிக்பாஸுக்கு போகலாம் என்ற தொனியில் பேசுகிறார். குறிப்பாக அறந்தாங்கி நிஷா, ஒரு வீடுனாலே ஒன்னா இருக்கமாட்டாய்ங்க; இதுல ரெண்டு வீடு வேறயா என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











