Don't Miss!
- News
சென்னை அண்ணாசாலையில் நடந்து சென்ற பெண்.. கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..உடல் நசுங்கி உயிரிழப்பு
- Finance
சென்செக்ஸ் 670 புள்ளிகள் சரிவு.. 2 முக்கியக் காரணம்..!!
- Technology
108எம்பி ரியர் கேமரா கொண்ட புதிய ஒப்போ 5G போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க..!
- Sports
திறமைகளை வளர்த்து கொள்ளுங்கள்.. இல்லை சூர்யகுமாரால் ஆபத்து வரும்.. நெஹ்ரா கொடுத்த எச்சரிக்கை
- Automobiles
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
விபத்தின் போது நான் குடிக்கவில்லை.. நான் செத்தே இருக்கலாம்.. ரசிகரின் கேள்வியால் மனமுடைந்த யாஷிகா!
சென்னை : யாஷிகா ஆனந்திடம் தோழியின் இறப்பு குறித்து மனம் புண்படுத்தும் வகையில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு வருத்தத்துடன் பதிலளித்துள்ளார்.
மாடலான யாஷிகா, கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்.
இதையடுத்து, ஜாம்பி, துருவங்கள் பதினாறு போன்ற திரைப்படங்களில் நடித்த இவர், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தார்.
அந்த இடத்திலா பியர்சிங் பண்ணுவாங்க.. கதறி அழுத யாஷிகா ஆனந்த்.. டிரெண்டாகும் வீடியோ!

யாஷிகாஆனந்த்
கவர்ச்சி கன்னியாக வலம் வந்து இளசுகளில் இதயத்தில் தனி இடம் பிடித்தார் யாஷிகா ஆனந்த். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இந்த வீட்டில் குட்டி குட்டி பவுசர் போட்டுக்கு ரசிகர்களை ஏக்க பெருமூச்சுவிடவைத்தார். இதனால், யாஷிகாவுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது.

பிக்பாஸ் வீட்டில்
புதுச்சேரியில் ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டுவிட்டு, சென்னை திரும்பிக்கொண்டிருந்த போது கார் விபத்துக்குள்ளனது. இந்த கோர விபத்தில் யாஷிகாவின் தோழி பவானி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த விபத்தில் யாஷிகாவுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிர் பிழைத்தார். இருப்பினும் காலில் ஏற்பட்ட முறிவு காரணமாக கிட்டத்தட்ட 3 மாதங்களாக எழுந்து நடக்க முடியாமல் படுத்தப்படுக்கையாக இருந்தார்.

மனதை புண்படுத்தும் கேள்விகள்
தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள யாஷிகா ஆனந்த், மீண்டும் சோஷியல் மீடியாவில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். யாஷிகாவின் ட்விட்டர் பக்கத்தில் அவரின் ரசிகர் ஒருவர், நீங்கள் குடித்துவிட்டு விபத்தை ஏற்படுத்திய வழக்கின் தற்போது நிலை என்ன என்றும், உங்கள் தோழியை கொன்ற பின் எப்படி உணர்கிறீர்கள் என மனதை புண்படுத்தும் வகையில் கேள்வி கேட்டுள்ளார்.

விபத்தின் போது நான் குடிக்கவில்லை
இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள யாஷிகா, அது குடித்துவிட்டு நடந்த விபத்து இல்லை தயவு செய்து மீண்டும் மீண்டும் அப்படி பதிவிடாதீர்கள். நான் குடிக்கவில்லை என மெடிக்கல் ரிப்போட்டில் உள்ளது. எதுவும் தெரியாமல் தவறான வதந்தியை பரப்பாதீர்கள். இந்த விபத்தில் நான் செத்திருந்தால் கூட நன்றாக இருந்து இருக்கும் என்று வருத்தத்துடன் பதிவிட்டு பின்னர் அதை ட்விட்டை டெலிட் செய்துள்ளார் யாஷிகா.